நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2022: துணை ஜனாதிபதி ஜதீப் தன்கர் ராஜ்யசபா தலைவராக பதவியேற்றார்

புதுடெல்லி:

இந்தக்கூட்டத்தொடர்தான், தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிற கடைசிக்கூட்டத்தொடர் ஆகும்.

இந்தக் கூட்டத்தொடர் மொத்தம் 23 நாட்கள் நடக்கும். 17 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் 29-ந் தேதி முடிவுக்கு வருகிறது.

இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.

நிர்வாகத்தை பலப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், பொறுப்புணர்வை அதிகரித்தல் மற்றும் பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் தேர்தல் செயல்முறையை சீர்திருத்துதல் ஆகிய நோக்கங்களுடன் தற்போதுள்ள சட்டங்களை இணைத்து, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரில், கன்டோன்மென்ட் மசோதா, 2022-ஐ கொண்டு வரவும் மத்திய அரசு எண்ணி உள்ளது . இந்த மசோதா கன்டோன்மென்ட் என்று அழைக்கப்படுகிற ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் அதிக ஜனநாயகம், நவீனமயமாக்கல் மற்றும் செயல்திறனை வழங்கும் நோக்கத்தில் கொண்டு வரப்படுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவும், இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட உள்ளது.

குளிர்காலக்கூட்டத்தொடரில் மொத்தம் 16 பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.

விலைவாசி உயர்வு, தேர்தல் கமிஷனர் நியமன விவகாரம், சீனாவுடனான எல்லைப்பிரச்சினை, நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்புவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டுவதால் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடரில் புயல் வீசும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொட௨ரில் துணை ஜனாதிபதி ஜதீப் தன்கர் ராஜ்யசபா தலைவராக பதவியேற்று கொண்டார்.

Update: 2022-12-07 05:48 GMT

Linked news