சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை - இஸ்ரேல் காசா... ... 10ம் நாளாக தொடரும் போர்: ஹமாஸ் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படவேண்டும் - ஜோ பைடன்

சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை - இஸ்ரேல்

காசா முனையின் தெற்கு எல்லையில் எகிப்து அமைந்துள்ளது. காசாவில் இருந்து எகிப்து செல்ல ரபா நகரில் உள்ள எல்லைப்பகுதியே ஒரே வழியாகும். இதனிடையே, ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் காசாவுடனான எல்லையை எகிப்து மூடியுள்ளது.

இதனிடையே, காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், காசாவில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறவும் அதற்கு ஈடாக மனிதாபிமான நிவாரண உதவிகளை காசாவுக்குள் கொண்டு செல்லவும் ரபா எல்லையை எகிப்து திறக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஹமாசுக்கு எதிரான போரில் இதுவரை சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டினர் காசாவை விட்டு வெளியேறுவதற்கு ஈடாக மனிதாபிமான நிவாரண உதவிகள் காசாவுக்குள் கொண்டு செல்ல அனுமதி வழங்கவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Update: 2023-10-16 07:48 GMT

Linked news