தி.மு.க. பவள விழா: ஏ.ஐ. மூலம் உரையாற்றிய கலைஞர்... ... ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரணமான சாதனை அல்ல- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தி.மு.க. பவள விழா: ஏ.ஐ. மூலம் உரையாற்றிய கலைஞர் கருணாநிதி

தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார்.

திமுக முப்பெரும் விழாவில் இருபெரும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதில் ஒரு நாற்காலியில் ஏ.ஐ. மூலம் கலைஞர் கருணாநிதி அமர்ந்து பேசுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றொரு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில்,“பெரியார் வடித்த கொள்கையை, அண்ணா வகுத்த பாதையை, என்னால் கட்டி காக்கப்பட்ட திடமான இயக்கத்தை ஓங்கி ஒலிக்க செய்து கம்பீரமாக ஆட்சியில் அமர வைத்திருக்கும் மு.க.ஸ்டாலினை எண்ணி எண்ணி என் மனம் பெருமை கொள்கிறது

ஸ்டாலின் என்றாலே உழைப்பு உழைப்பு, உழைப்பு... 55 ஆண்டுகளாக கட்சிக்காக அயராது உழைத்து, திராவிட செம்மலாய் இந்தியாவில் சிறப்பான முதல்-அமைச்சராக சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, பாதையில் ஆட்சியை சிறப்பாக வழி நடத்துகிறார் ஸ்டாலின். வாழ்க பெரியார், அண்ணாவின் புகழ் ஓங்குக திராவிட மாடல்” என்று அவர் கூறினார்.

இந்த விசேஷ ஏற்பாட்டால் தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். 

Update: 2024-09-17 13:06 GMT

Linked news