புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை நாளுக்குநாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது.;

Update:2024-07-18 16:44 IST

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ம் தேதி இந்திய பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியடைந்தது. நிப்டி 1000 புள்ளிகள், சென்செக்ஸ் 4 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஜூன் 5ம் தேதி முதல் இந்திய பங்குச்சந்தை ஏற்றம் காண தொடங்கியது. வெளிநாட்டு முதலீட்டாளர் இந்திய பங்குகளில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் இந்திய பங்குச்சந்தை நாளுக்கு நாள் புதிய உச்சம் அடைந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்றும் (ஜூலை 18) புதிய உச்சம் கண்டுள்ளது. அந்த வகையில் நிப்டி 187.85 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 800.85 என்ற புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

அதேபோல், சென்செக்ஸ் வர்த்தக நேரத்தில் 626.91 புள்ளிகள் உயர்ந்து வர்த்தக இறுதியில் 81 ஆயிரத்து 343.46 என்ற புள்ளிகளுடன் நிறைவடைந்தது. மேலும் பேங்க் நிப்டி 223.90 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 620.70 என்ற புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

இந்திய பங்குச்சந்தை புதிய உச்சம் தொட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்