வேலூர் ஆவின் விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு

Update: 2023-06-07 13:07 GMT

வேலூர் ஆவினில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கிய விவகாரம் தொடர்பாக வாகன உரிமையாளர் சிவக்குமார், ஓட்டுநர் விக்கி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகம் சார்பில் அளித்த புகாரை தொடர்ந்து சத்துவாச்சாரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருவர் மீதும் அவதூறாக பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்