தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட ரூ.17,300 கோடி மதிப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:- வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை தமிழ்நாட்டின் தூத்துக்குடி எழுதி வருகிறது. திட்டங்களின் தொடக்கம் என்பது அனைவரின் முன்னேற்றம், வளர்ச்சி, நம்பிக்கையின் எடுத்துக்காட்டு.இந்த திட்டங்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.