சென்னை, வேளச்சேரி ரெயில் நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் 9 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது.