கவர்னர் பணியை தவிர அனைத்து பணிகளையும் செய்கிறார் ஆர்.என்.ரவி -அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை,
மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்துவிட்டு கவர்னர் பேச வேண்டாம் என்றும் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தை மீறி பொதுவெளியில் நிர்வாக விவரங்களை பேசி வருகிறார்.
கவர்னர் ஆர்.என்.ரவி சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். கவர்னருக்கான பணியை தவிர அனைத்து பணிகளையும் செய்கிறார். மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்பான பதவியில் இருப்பதை மறந்து பேசுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.