பிப்.18-ல் மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Update: 2024-01-30 03:37 GMT

சென்னை,

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயண நிறைவு விழா பொதுக் கூட்டம் திருப்பூரில் நடைபெறுகிறது. இந்த நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி பிப்.18-ல் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து, பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளை சந்தித்து மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் நாளையும் என் மண், என் மக்கள் பிரசார நடைப்பயணம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்