ஆகஸ்ட் 6-ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஆகஸ்ட் 6ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டமளிக்க உள்ளார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.
சென்னை,
சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தற்போது சென்னைக்கு வரும் தேதி வருவது உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில், சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டமளிக்க உள்ளார். பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்கின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானநிலையம் சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை வரவேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரவுபதி முர்மு சென்னை வர உள்ளார்.