கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் மேலும் 2 தொகுதிகளில் போட்டி
சென்னை,
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மேலும் 2 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்கள் போட்டியிடுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கோலார் தங்கவயல் மற்றும் காந்திநகர் தொகுதியில் 2 வேட்பாளர்களை அறிவித்தார் ஓ.பன்னீர் செல்வம். கோலார் தங்கவயல் அனந்தராஜ், காந்திநகர் தொகுதியில் கே.குமார் போட்டியிடுவார் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என ஏற்கனவே ஓபிஎஸ் அறிவித்தார்.