புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக - மத்திய அரசை கண்டித்து எதிர்கட்சிகள் கூட்டறிக்கை
புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் பல அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டும் என்றே குறி வைக்கப்படுகின்றனர்.
அரசை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்களையும், எதிர்கட்சியை சேர்ந்தவர்ளையும் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக வேண்டுமென்றே விசாரணை அமைப்புகளை கொண்டு மிரட்டுகின்றது மத்திய அரசு என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.