ஒடிசா ரெயில் விபத்தில் தமிழர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை - உதயநிதி ஸ்டாலின் பேட்டி

Update: 2023-06-04 12:27 GMT

ஒடிசாவில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஒடிசா ரெயில் விபத்தில் தமிழர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.ஒடிசா மாநில அமைச்சர்களிடம் பேசி தமிழர்களின் நிலை குறித்து அறிந்தோம். ரெயில் விபத்தை தவிர்த்திருக்கலாம், ரெயில் விபத்து தொடர்பாக மத்திய அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அதிகாரிகள் ஒடிசாவில் உள்ளனர் என்றார்.

மேலும் செய்திகள்