தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 105 -ஆக குறைந்தது
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று 113-ஆக இருந்த நிலையில் இன்று 105 ஆக குறைந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று 113-ஆக பதிவாகி இருந்த நிலையில் இன்று 105 ஆக குறைந்துள்ளது. தலைநகர் சென்னையில் ஒருநாள் பாதிப்பு நேற்று 81 ஆக பதிவான நிலையில், இன்று 61 ஆக உள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 976- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 62 ஆக உள்ளது. இதுவரை 34 லட்சத்து 17 ஆயிரத்து 152 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 799 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு இல்லை.