அலுவலகத்தில் பணிபுரியும் சிலருக்கு, பதவி உயர்வும், சம்பள உயர்வும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கலாம். தொழில் செய்பவர்கள், அதில் புதிய முறைகளைப் புகுத்த முயற்சி செய்வார்கள். குடும்பத்தில் மனதுக்குப் பிடித்தமான சம்பவங்கள் நடைபெறும். மனக்கசப்பு மாறும். பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் வீடு தேடி வரும். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு நெய் தீபமிட்டு வழிபாடு செய்யுங்கள்.