ம.பி.யில் இரு சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

Update: 2023-04-19 04:18 GMT

மத்திய பிரதேச மாநிலம் சிங்பூர் ரெயில் நிலையம் அருகே இரு சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ரெயில்கள் மோதி கவிழ்ந்ததில் ரெயில் பெட்டிகளிடையே சிக்கியுள்ள ரெயில்வே பணியார்கள் இருவரை மீட்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சரக்கு ரெயில் விபத்து குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்