விரைவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசின் அனுமதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக சட்டசபையில் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மேகதாது அணை திட்டம் தொடர்பாக அனுமதி கோரி மத்திய அரசுக்கு பரிந்துரைக்கு அனுப்பட்டுள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார். மேகதாது அணை கட்ட தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.