சென்னையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 30 இடங்களில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. பெசன்ட்நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
உடனடியாக குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட இடங்களில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.