அதிமுக அலுவலக சாலை வி.பி.ராமன் சாலை என பெயர் மாறுகிறது...!

Update: 2023-03-28 09:03 GMT

சென்னையில் அதிமுக தலைமையகம் உள்ள சாலையின் பெயரை மாற்ற மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவ்வை சண்முகம் சாலையை பிரித்து வி.பி.ராமன் சாலை என பெயர் சூட்டப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. திமுகவின் ஆரம்பகால உறுப்பினரான வி.பி.ராமன், 1977 முதல் 1979 வரை தமிழக அரசின் வழக்கறிஞராக பணியாற்றியவர் ஆவார்.

மேலும் செய்திகள்