டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 4 மணி அளவில் சென்னை வந்தடைந்தார். இந்தநிலையில் சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அரவிந்த் கெஜ்ரிவால், பகவத்சிங் மானை பொன்னாடை போர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
டெல்லி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தடுக்க ஆதரவு திரட்டுகிறார்.