சென்னையில் 48 மணி நேரத்துக்கு பின் மழை சற்று ஓய்ந்தது

Update: 2023-12-04 16:48 GMT

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. 'மிக்ஜாம்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 100 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், கனமழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. 48 மணி நேரமாக வெளுத்து வாங்கிய மழை தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

மேலும் செய்திகள்