தி.மு.க.வில் இணைந்தனர்
சிவந்திபுரம் ஊராட்சி கஸ்பா தெற்கு கிளையை சேர்ந்த அருண் தலைமையில் 25 இளைஞர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் முன்னிலையில் அம்பை ஒன்றியம், சிவந்திபுரம் ஊராட்சி கஸ்பா தெற்கு கிளையை சேர்ந்த அருண் தலைமையில் 25 இளைஞர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். அம்பை ஒன்றிய செயலாளரும், யூனியன் தலைவருமான பரணி சேகர், அம்பை சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், மாநில அமைப்புசாரா ஒட்டுனர் அணி துணை செயலாளருமான சிவராஜ், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட துணைச் செயலாளர் மைக்கேல், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளரும், மாவட்ட கவுன்சிலருமான அருண்தபசு பாண்டியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மேலப்பாட்டம் சுப்பிரமணியன், கிளை செயலாளர் நாராயணன், பஞ்சாலை தொ.மு.ச. பழனி சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.