கன்னி - தமிழ் மாத ஜோதிடம்

Update:2022-05-10 20:29 IST

வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை


உற்றார், உறவினர்களின் உள்ளம் அறிந்து உதவும் கன்னி ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் வக்ரம் பெறுகிறார். மேலும் குருவினுடைய பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. தன, பாக்கியாதிபதி சுக்ரன், சப்தம ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும்.

மீன - செவ்வாய் சஞ்சாரம்

வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அபதிபதியான செவ்வாய், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது சகோதரர்களால் சங்கடம் வரலாம். தொழிலில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பிறரை நம்பி செய்த காரியம் மன வாட்டம் தரும்.

சனி - செவ்வாய் பார்வைக் காலம்

வைகாசி மாதம் 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கிறார். உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானம் பலமிழக்கிறது. எனவே வாழ்க்கைத் துணை வழியே சில பிரச்சினை ஏற்படலாம். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு சில தடுமாற்றங்களும், தடைகளும் ஏற்படும். பிள்ளைகளை நெறிப்படுத்துவதன் மூலமே நிம்மதி பெறமுடியும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் தடை வரலாம். வீண் விரயங்கள் ஏற்படும் நேரம் இது.

புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். அது உங்களுக்கு யோகம்தான். உடல்நலம் சீராகும். நினைத்ததை நினைத்தபடி செய்வீர்கள். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு, பிரபல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரலாம்.

மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

இதுவரை மீனத்தில் உச்சம் பெற்று சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். அவர் தன் சொந்த வீட்டைப் பார்ப்பதால் தன ஸ்தானம் வலுவடைகிறது. பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பெண்வழிப் பிரச்சினை அகலும். புதிய தொழிலுக்கு வங்கிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், ஊதிய உயர்வு உண்டு. படிப்பிற்கேற்ற நல்ல வேலை அமையும்.

மகரச் சனியின் வக்ர காலம்

உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், வைகாசி 11-ந் தேதி மகரத்தில் வக்ரம் பெறுகிறார். இந்த நேரம் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவிழப்பதால் எதிலும் கவனம் தேவை. சொத்துக் களாலும், சொந்தங்களாலும் சில பிரச்சினை ஏற்படலாம். விரயங்களை, சுப விரயமாக மாற்றுங்கள். உத்தியோகத்தில் சில சர்ச்சைகள் உருவாகும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

இம்மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று நரசிம்மரை வணங்குங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:மே: 15, 16, 19, 20, 30, 31, ஜூன்: 4, 5, 10, 11, 12மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வை இருப்பதால் ஆரோக்கியம் சீராகும்.உற்சாகத் துடன் பணிபுரிவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. சுபச்செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு புதிய வேலைக்கு செய்த முயற்சியில் அழைப்புகள் வரலாம். தாய்வழி ஆதரவு உண்டு.

மேலும் செய்திகள்