கன்னி - ஆடி தமிழ் மாத ஜோதிடம்

Update:2023-07-17 00:15 IST

ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2023 முதல் 17-08-2023 வரை

அமைதியாக இருந்தபடி அரிய பணிகளைச் செய்யும் கன்னி ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் விரயாதிபதி சூரியனோடு கூடியிருக்கிறார். எனவே விரயங்கள் அதிகரிக்கலாம். அஷ்டமத்து குருவின் ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்திற்கென்று ஒரு தொகையைச் செலவிடும் சூழல் உருவாகும். ராகு-கேதுக்களின் ஆதிக்கம் இருப்பதால் ஏற்ற இறக்க நிலை மாற, யோகபலம் பெற்ற நாளில் முறையான வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

மேஷ - குரு சஞ்சாரம்

நவக்கிரகத்தில் சுப கிரகமான குரு பகவான் இப்பொழுது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் குரு பகவான் அடியெடுத்து வைத்திருப்பதால் வேலைப்பளு கூடும். இருப்பினும் பொருளாதார நிலை திருப்தி தராது. உத்தியோகத்தில் இடமாற்றம் உறுதியாகலாம். வாகனத்தால் தொல்லைகளும், வளர்ச்சிக்கு இடையூறுகளும் அதிகரிக்கும். குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிவதால் குடும்பத்தில் நீண்ட நாட்களாகத் தாமதப்பட்டு வந்த காரியங்கள் இப்பொழுது நடைபெறத் தொடங்கும். எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்த்து, நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றிவிடுவீர்கள். கொடுக்கல் - வாங்கல்களில் பழைய கடன்களை பைசல் செய்தாலும் புதியதாக கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். குடும்பப் பெரியவர்களின் யோசனையைக் கேட்டு நடந்தால் குழப்பங்கள் ஏற்படாது.

சுக ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் மருத்துவத்தால் பலன் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். அத்தியாவசிப் பொருட்கள் வாங்குவதில் அதிகக் கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டு வணிகம் ஆதாயம் தரும்.

சிம்ம - புதன்

ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிநாதன் புதன் விரய ஸ்தானத்திற்கு வரும்போது விரயங்களே அதிகரிக்கும். வரவு வருவதற்கு முன்னதாகவே செலவு காத்திருக்கும். இடமாற்றம், வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடியின் காரணமாக, ஒருசிலர் விருப்ப ஓய்வு பெற்று, பணியில் இருந்து வெளியேற முடிவு செய்வர். அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுக்க வேண்டாம். உறவினர் வழியில் ஒரு தொகையைக் கொடுத்து உதவும் சூழ்நிலை உருவாகும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் லாபமும், பிற்பகுதியில் விரயமும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு மனக்கட்டுப்பாடு அவசியம் தேவை. பெண்களுக்கு உடன் இருப்பவர்களால் பிரச்சினை ஏற்படும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வருமானம் திருப்தி தரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 19, 20, 25, 30, 31, ஆகஸ்டு: 10, 11, 15, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

Tags:    

மேலும் செய்திகள்