கன்னி - தமிழ் மாத ஜோதிடம்

Update:2023-03-15 00:15 IST

பங்குனி மாத ராசி பலன்கள் 15-03-2023 முதல் 13-04-2023 வரை

மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லும் கன்னி ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் நீச்சம் பெற்று 'நீச்ச பங்க ராஜயோக'த்தில் இருக்கிறார். எனவே நீண்ட நாளையக் கனவுகள் நனவாகும். உடல்நலம் சீராகி சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். பணிபுரியும் இடத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். ராசிநாதனோடு சூரியனும் இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்குவதால் கூடுதல் பொறுப்புகளும் வரலாம். நீண்ட நாளையப் பிரச்சினைகளுக்குத் தெளிவான முடிவெடுக்கும் நேரம் இது.

10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சனியைப் பார்க்கிறார். இந்த நிகழ்வு பங்குனி 14-ந் தேதி வரை இருப்பதால், மாதத் தொடக்கத்தில் பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கலாம். பிள்ளைகளை நெறிப்படுத்திக் கொள்வது நல்லது. பணப்பரிமாற்ற விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் முன்னேற்றப் பாதிப்புகள் வரலாம். எனவே நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கைகூடுவதற்கு முன்னால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

மேஷ - புதன்

பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் அகலும். பொறுப்புகள் அதிகரிக்கும். வீண் பிடிவாதம் பிடித்த உறவினர்கள் விலகிச் செல்வர். முயற்சித்த காரியங்களில் முத்தான பலன் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் மங்கலச் செய்தி வந்து சேரும். வெளிநாட்டு முயற்சியில் இருந்த தடை அகலும். அரசியல் பிரமுகர்களின் ஆதரவோடு பெரிய முயற்சி ஒன்று கைகூடும்.

ரிஷப - சுக்ரன்

பங்குனி 24-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானாதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம் பொன்னான நேரமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். பதவிகளைத் தேடிப் போகாத உங்களுக்கு பதவிகள் கிடைக்கலாம். தோளுக்கு மேல் மாலை வந்து, நாளுக்கு நாள் மகிழ்ச்சியைக் கூட்டும். ஆடை, ஆபரணங்கள், அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தொண்டர்களின் அரவணைப்பும், தொடர்ந்து செல்வாக்கும் இருக்கும். வியாபாரம், தொழில் நடத்துபவர்களுக்கு கூட்டாளிகள் கூடுதல் லாபம் தர வழிவகுத்துக் கொடுப்பர். கலைஞர்களுக்கு வருமானம் உயர வழி பிறக்கும். மாணவ - மாணவியர்கள், படிக்கும் நேரத்தை அதிகப்படுத்தி கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிக்கலாம். பெண்களுக்கு தெய்வ வழிபாட்டில் ஆர்வம் கூடும். உடல்நலத்திற்காக செலவிடும் தொகை குறையும். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு வீடு, வாகனம் வாங்க சலுகைகள் கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 15, 16, 26, 27, 31, ஏப்ரல்: 1, 7, 8.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.

மேலும் செய்திகள்