ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2022 முதல் 16-11-2022 வரை
உதவி செய்வதால் பிறர் உள்ளத்தில் இடம்பிடிக்கும் கன்னி ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உச்சம் பெற்றிருக்கிறார். குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. எனவே ஆரோக்கியம் சீராகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
துலாம் - சுக்ரன் சஞ்சாரம்
ஐப்பசி 2-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது அவருக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், பலம்பெறும் போது எடுக்கும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காத இடத்தில் பணியாற்றி வந்தவர்களுக்கு, இப்போது நல்ல இடத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை அமையும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். இல்லத்தில் காலாகாலத்தில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் நடைபெற வழிபிறக்கும்.
துலாம் - புதன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கும் 10-ம் இடத்திற்கும் அதிபதியான புதன், ஐப்பசி 6-ந் தேதி துலாம் ராசிக்குச் செல்கிறார். தன ஸ்தானத்தில் சூரியன், சுக்ரனோடு இணைந்திருக்கும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக அல்லது கல்யாணம் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் முயற்சி கைகூடும். தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமான பற்றாக்குறை அகலும். என்றைக்கோ வாங்கிப் போட்ட சொத்து பலமடங்கு உயரும்.
மிதுன - செவ்வாய் வக்ரம்
ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். அதே நேரம் மகரத்தில் உள்ள சனியை பார்க்கவும் ெசய்கிறாா். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ரம் பெறுவது நன்மைதான். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரும். சகோதரர்களோடு இருந்த மனப் போராட்டங்கள் அகலும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். இட மாற்றம், வீடு மாற்றம் எளிதில் அமையும். வழக்குகள் சாதகமாக முடியும். செவ்வாய் சனியைப் பார்ப்பதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.
விருச்சிக - புதன் சஞ்சாரம்
ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல் கிறார். உங்கள் ராசிநாதன் புதன், சகாய ஸ்தானத்திற்கு வரும் போது தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க எடுத்த முயற்சிகளில் அனு கூலம் உண்டு. உற்றார் உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். தற்காலிகப் பணியில் இருப்பவர் களுக்கு நிரந்தரப் பணி அமையும்.
விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்
ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதி யான சுக்ரன், சகாய ஸ்தானத்திற்கு வரும் போது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். பழைய ஆபரணங்களைக் கொடுத்துப் புதிய ஆபரணங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
குரு வக்ர நிவர்த்தி
உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், மாதத் தொடக்கத்தில் வக்ரமாக இருக்கிறார். அவர் ஐப்பசி 30-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இதனால் அவரது பார்வைக்கு பலன் கூடுதலாகக் கிடைக்கும். அந்த வகையில் களத்திர ஸ்தானம் பலம்பெறுகிறது. எனவே இல்லத்தில் நடைபெறாதிருந்த சுபகாரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறும். பொருளாதார நிலை திருப்தி தரும்.
இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை வழிபாடு செய்து வந்தால் துயரங்கள் விலகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- அக்டோபர்: 18, 19, 26, 27, 30, 31, நவம்பர்: 9, 10, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் குரு பார்வை இருப்பதால் குழப்பங்கள் அகலும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கைநிறைய சம் பாதிக்கும் வாய்ப்பு உண்டு. ஆயினும் செவ்வாய் - சனி பார்வை இருப்பதால் பிள்ளைகளால் பிரச்சினைகளும், விரயங்களும் வந்துசேரும். தாய்வழி ஆதரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. உடல்நலத்திலும் கவனம் தேவை.