கன்னி - தமிழ் மாத ஜோதிடம்

Update:2022-07-16 21:57 IST

ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2022 முதல் 16-08-2022 வரை

நல்ல யோசனைகளை அள்ளி வழங்கும் கன்னி ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதோடு குரு பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால் நினைத்த காரியம் நிறைவேறும்.

சிம்ம - புதன் சஞ்சாரம்

ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம், விரயங்கள் அதிகரிக்கலாம். சுபச் செலவுகளைச் செய்தால், வீண் விரயங்களில் இருந்து விடுபடலாம். வீடுமாற்றம், இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டு முயற்சியில் இதுவரை இருந்த தடை அகலும். தொழில் முன்னேற்றத்திற்காகப் புதியவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்வீர்கள்.

கடக - சுக்ரன் சஞ்சாரம்

ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது பொருளாதாரம் மேம்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்துமுடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். பணியில் இருப்பவர்கள், சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். ஆபரண சேர்க்கை உண்டு.

குருவின் வக்ர இயக்கம்

ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற குரு வக்ரம் பெறுவது யோகம்தான். 4-க்கு அதிபதி வக்ரம் பெறுவதால் சுக ஸ்தானம் பலமிழக்கிறது. எனவே ஆரோக்கியம் பாதிக்கும். இடம், பூமி வாங்கும் முயற்சியில் சிறு தடைகள் ஏற்பட்டு அகலும். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. தன்னிச்சையாகச் செயல்படுபவர்கள் சில தடுமாற்றங்களை சந்திப்பர். 7-க்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவதால் வாழ்க்கைத் துணை வழியே சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பாசம் மிக்கவர்கள் பகையாக மாறலாம். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துச் செல்வது நல்லது.

ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்

ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பாக்கிய ஸ்தானம் பலப்படுகிறது. எனவே பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று மகிழ்ச்சியைத் தரும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்திவைப்பீர்கள்.

இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் வராஹி அம்மனை வழிபடுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 23, 25, 29, 30, ஆகஸ்டு: 4, 5, 9, 10 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதத் தொடக்கத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிம்ம புதனின் சஞ்சாரத்திற்குப் பிறகு செலவு கூடும். கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்க அல்லது தொழில் தொடங்குவீர் கள். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். சம்பள உயர்வுடன் கூடிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அதுவும் கைகூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும்.

மேலும் செய்திகள்