மூளையை பாதுகாப்போம் - உலக மூளை தினம் 2023

நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகள் மற்றும் மூளை செல்கள் வயதாவதினால் தேய்மானத்திற்கு உட்படும்.;

Update:2023-07-22 00:00 IST

எண் ஜான் உடலுக்கு சிரசே பிரதானம். அந்த சிரசிற்கு மூளையே பிரதானமாகும். மனித மூளையின் மகத்துவம் அளவிட முடியாதது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை அறிந்து விழிப்புணர்வோடு நம்மை பாதுகாத்துக் கொள்ள உலக அளவில் ஜூலை 22 ஆம் தேதி மூளை தினமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளவும் நரம்பு மண்டலம் மற்றும் மூளை தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நடக்கவும் இத்தினம் உறுதி செய்கிறது.

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பதில் மூன்று முக்கிய படிகள் உள்ளன. முதன்மையானது நோய் வராமல் தடுப்பது இரண்டாவது நோய் வந்த பின் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது மூன்றாவது மூளையின் திறனை புனரமைத்து கொள்வது.

தற்காத்து கொள்வது:

மூளையில் ஏற்படக்கூடிய நோய்களை தடுப்பதற்கான முக்கியமான ஒன்று சரியான வாழ்க்கை முறை. சரியான உணவு பழக்கம், போதுமான தூக்கம், தேவையான உடல் உழைப்பு மற்றும் மூளை உழைப்பு போன்றவை பல நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது நேர்மறையான எண்ணங்களுடன் சுறுசுறுப்பான மனநிலையுடன் மகிழ்ச்சியாக வாழ்வது ஆரோக்கியமான மூளைக்கு வழிவகுக்கும். உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு போன்ற நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். வயதானவர்கள் எப்பொழுதும் மூளை உழைப்பை விடாமல் தொடர்ந்து ஈடுபடுவது ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும். மரபு ரீதியாக மூளை நரம்பு மண்டலம் தொடர்பான நோய் உள்ளவர்கள் தங்களை விழிப்புணர்வோடு பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

சரியான சிகிச்சை முறை:

மூளை மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான நோய்களின் ஆரம்ப கட்ட அறிகுறிகளை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை மேற்கொண்டால் பல பெரிய பாதிப்புகளை முழுமையாக தடுக்க உதவும். ஸ்ட்ரோக் என்று அழைக்கப்படும், மூளைக்கான ரத்த ஓட்டம் தடைபடுவதால் மூளை செல்கள் அழிந்துவிடும், பிரச்சனையில் நேரம் மிகவும் முக்கியமானது. உடனடியாக

சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம் எனவே அதற்கான வசதிகள் கொண்ட மருத்துவமனையை நாட வேண்டும். பார்க்கின்சன்ஸ், வலிப்பு போன்ற நோய்களுக்கு தகுந்த மருத்துவர்களிடம் சரியான மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்வது அவசியம்.

புனரமைப்பு:

நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகள் மற்றும் மூளை செல்கள் வயதாவதினால் தேய்மானத்திற்கு உட்படும். இதனால் மூளை செல்கள் அழியும் நிலை ஏற்படும் போது அதனால் பல அறிகுறிகள் ஏற்படும். அதனை சரியான சிகிச்சைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாக சரி செய்து கொண்டு வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். வலிப்பு, மறதி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்கள் மற்றவர்களின் உதவியை நாடுவதும், அவர்களுக்கு தேவையான உதவிகளை சமுதாயத்தில் உள்ளோர் அன்போடு செய்வதும் அவசியமாகிறது. அதேபோல் ஆட்டிசம், டிஸ்லெக்சியா என்ற கற்றல் குறைபாடு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களும் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழாமல், தேவையான உதவிகளை பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

Dr. Bhuvaneshwari Rajendran

Senior Consultant - Neurology & Neurophysiology

Kauvery Hospital Alwarpet Chennai

For Appointments Call : 044 4000 6000

Full View
Tags:    

மேலும் செய்திகள்