மனதை சிலிர்க்க வைக்கும் பொழுதுபோக்கு பூங்கா வொண்டர்லா
வொண்டர்லா, தங்களின் 18ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதத்தில் பல சிறப்பு சலுகைகளையும் நிகழ்ச்சிகளையும் அளிக்க உள்ளது.;
இந்தியாவில் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காக்களை அமைத்திருக்கும் வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் தன்னுடைய வெற்றிகரமான 18வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதத்தில் பல புதுமையான நிகழ்சிகளை நடத்துவதுடன் பல சிறப்பு சலுகைகளையும் வழங்கிவருகிறது. 2005 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை சாகச விரும்பிகளுக்கும் குடும்பங்களுக்கும் பொழுதுபோக்கு விரும்புபவர்களுக்கும் தன்னிகரில்லா அனுபவத்தை அளித்து வந்துள்ளது வொண்டர்லா. தங்களின் பொழுது போக்கு பூங்காவிற்கு வரும் மக்களுக்கு மறக்க முடியாத நினைவுகளையும், மிகுந்த திருப்தியையும் அளிப்பதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அளித்து வருவது இப்பூங்காவின் தனிச்சிறப்பு.
வொண்டர்லா, தங்களின் 18ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதத்தில் பல சிறப்பு சலுகைகளையும் நிகழ்ச்சிகளையும் அளிக்க உள்ளது. அக்டோபர் 14ஆம் தேதி. முதல் 24ஆம் தேதி வரையில் 11 நாட்கள் ஒண்டர்லாவில் தசரா ஹப்பா என்ற பெயரில் மங்களூர் டால் டான்ஸ், மிகப்பிரம்மாண்டமான ஊர்வலங்கள், சிங்காரி மேளா, உணவு திருவிழா, டி.ஜே நிகழ்ச்சி போன்ற பல சிறப்பு நிகழ்வுகளை நடத்த உள்ளது. இந்த சிறப்பு நிகழ்வைப் பற்றி குறிப்பிடும் வண்டர்லா ஹாலிடேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண் கே சிட்டிலபிள்ளி கூறுகையில் "இத்தனை ஆண்டுகள் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்ததை நினைத்து மிகவும் பெருமை அடைகிறேன். ஒண்டர்லா குழுவிற்கும் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்", என்றார்.
வொண்டர்லா பெங்களூரு பூங்காவில் பலவிதமான கவர்ச்சியான, எல்லா தரப்பு மற்றும் எல்லா வயது மக்களையும் ஈர்க்கக்கூடிய பல கேளிக்கை அம்சங்கள் உள்ளது. 82 ஏக்கர் பரப்பளவில் 61 ரைடுகள், நிலத்தில் அமைந்துள்ள 28 கேளிக்கை விளையாட்டுக்கள், 21 தண்ணீர் விளையாட்டுக்கள் மற்றும் 12 குழந்தைகளுக்கான பிரத்தியேகமான ரைடுகள் என்று இங்குள்ள கேளிக்கை அம்சங்கள் பலப்பல. மனதிற்கு சிலிர்பூட்டும் மற்றும் இதயத்தை வேகமாக இயங்கச்செய்யும் ரோலர் கோஸ்டர், ஃப்ளாஷ்
டவர் மற்றும் உற்சாகமளிக்கும் வொண்டர் ஸ்ப்ளாஷ் போன்றவை வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்ட கூடியவை.
இதன் நிலப்பரப்பில் பல தோட்டங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு பல சிறப்பு நிகழ்வுகளும், கண்காட்சிகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒண்டர்லா பெங்களூருவின் பொழுதுபோக்கு பூங்கா டிஆர்ஆர்ஏஐஎன் ரீடெய்ல் அவார்ட் 22-23, ஐஏஏடிஐ நேஷனல் அவார்ட் ஃபார் எக்ஸலன்ஸ் 22-23 போன்ற விருதுகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒண்டர்லா ஹாலிடே லிமிடெட் நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்காக்கள் இந்தியாவில் கொச்சி பெங்களூரு மற்றும் ஹைதராபாதில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரில் வொண்டர்லா ரிசார்ட் என்ற விருந்தினர் மாளிகையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 3.9 கோடி வாடிக்கையாளர்கள் இந்த பொழுதுபோக்கு பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர் என்பதுடன் இந்தியா மற்றும் ஆசியாவிலேயே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள பொழுதுபோக்கு பூங்கா இது என்பதும் குறிப்பிடத்தக்கது.