மறக்க முடியாத பரவசமூட்டும் கோடை விடுமுறைவொண்டர்லா சம்மர்லா ஃபீஸ்டா 2024
இந்த சம்மர்ல வொண்டர்லா ஃபீஸ்டா - 2024 என்ற மறக்க முடியாத சிலிர்ப்பான கோடை விடுமுறையை அனுபவித்து மகிழுங்கள்!;
இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட், வொண்டர்லா பெங்களூரு மற்றும் கொச்சி பூங்காக்களில் 'சம்மர்லா ஃபீஸ்டா', மே31 வரை இயங்குகிறது. கோடைகாலம் தொடங்கும் வேளையில், வொண்டர்லாவின் உற்சாகமான ஹை த்ரில் மற்றும் வாட்டர் ரைடுகளுடன் சேர்ந்து, த்ரில்லான நிகழ்ச்சிகள், நேரலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள், கேளிக்கை விளையாட்டுகள், டைனமிக் டிஜே செட்கள் உட்பட பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக பல அற்புதமான நிகழ்சிகளை உருவாக்கியுள்ளது.
வொண்டர்லா கொச்சி அதன் சமீபத்திய சேர்க்கையான ஏர் ரேஸ் என்ற அதீத உற்சாகத்தை கொடுக்கக்கூடிய ரைடை இந்த கோடை விடுமுறையில் அறிமுகப்படுத்தியுள்ளது
கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நினைக்கிறீர்களா? அப்படியென்றால் வொண்டர்லா பெங்களூரு மற்றும் கொச்சி பூங்காக்களைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்! இதற்காக வொண்டர்லா, நிலம் மற்றும் நீர் சவாரிகளின் அற்புதமான கலவையை வழங்குகிறது. ரீகாயில் போன்ற சவாரிகளில் உற்சாகத்தை உணருங்கள் அல்லது வொண்டர்லாவின் லேசி ரிவரில் நிதானமாக மிதந்து கொண்டு ஓய்வெடுக்கவும். வொண்டர்லா அனைத்து வயதினருக்கும் ஏற்ற அனுபவத்தை வழங்குகிறது. இந்த பூங்காவின் அனுபவங்களை மறக்க முடியாத கோடை விடுமுறை நினைவுகளாக மாற்றுங்கள்.
வொண்டர்லாவில் பார்வையாளர்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் காத்திருக்கின்றன. வொண்டர்லாவிற்கு வருகை தர விரும்பும் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு சிறப்பு சலுகையாக மூன்று டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்ற சலுகையை வழங்குகிறது. இது மே 31ஆம் தேதி வரையிலான வார நாட்களுக்கு மட்டுமே பொருந்தும்.
வொண்டர்லா தனது பிரபலமான ஹால் டிக்கெட் சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது, இது 2023-2024 கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை முடித்த மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். தங்களின் தேர்வு ஹால் டிக்கெட்டுகளை காட்டி நுழைவு டிக்கெட்டுகளில் 35% தள்ளுபடியைப் பெறலாம். இந்தச் சலுகை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முன்பதிவுகளுக்குப் பொருந்தும், மாணவர்கள் தங்கள் நடப்பாண்டுக்கான ஹால் டிக்கெட்டை பூங்காவில் நுழைவதற்கு முன் சரிபார்க்க வேண்டும்.
மேலும், வொண்டர்லா பார்க்ஸ் 16 முதல் 24 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு 25% சிறப்பு தள்ளுபடியை வெளியிட்டுள்ளது. ஆன்லைன்
மற்றும் ஆஃப்லைன் முன்பதிவுகளுக்கு இந்த சிறப்பு டிக்கெட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடிக்கு தகுதியுடையவர்கள், நுழைவதற்கு அவர்களின் கல்லூரி அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
இதை தவிர வொண்டர்லா, 3 நாட்களுக்கு முன்னதாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு 10% Early Bird தள்ளுபடியை வழங்குகிறது. ADV03DAYS என்ற ப்ரோமோ கோடை உபயோகித்து இந்த 10% தள்ளுபடியை அனுபவிக்கலாம்.
மேலும், மே மாதத்தில் தங்கள் பிறந்தநாளைக் கொண்டாடும் நபர்கள் மே மாதத்தில் வொண்டர்லா பூங்காவிற்கு வந்தால் '1 வாங்கினால் 1 இலவச டிக்கெட்டைப் பெறலாம்'. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முன்பதிவுகளுக்கு இந்த சலுகை கிடைக்கும். பேருந்து பயணத்தை விரும்புவோருக்கு, BMTC வால்வோ பேருந்து டிக்கெட்டை கவுண்டரில் காண்பித்தால் பூங்கா நுழைவு டிக்கெட்டுகளில் 15% தள்ளுபடியை வழங்குகிறது
வொண்டர்லா, https://bookings.wonderla.com/ என்ற ஆன்லைன் போர்ட்டல் மூலமாகவோ அல்லது பூங்கா கவுண்டர்களில் இருந்து நேரடியாகவோ தங்கள் நுழைவுச் சீட்டுகளை முன்பதிவு செய்ய பார்வையாளர்களை ஊக்குவிக்கிறது.
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்,
வொண்டர்லா பெங்களூரு பூங்கா +91 80372 30333 அல்லது +91 80350 73966.
வொண்டர்லா கொச்சி பூங்கா 0484-3514001 அல்லது 75938 53107.