ஆச்சரியமும்.... உண்மையும்.... 100 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் டி.வி.எஸ். கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்றே வாங்கிடுங்கள்

டிவிஎஸ் ஐக்யூப் சீரிஸ் வாகனங்களுக்கு பேம் 2 மூலம் கிடைக்கும் மானியத் தொகை ரூபாய் 22,065 ஆகும்.

Update: 2024-03-14 16:17 GMT

இந்தியாவில் மின்சார வாகனங்களை மக்கள் வாங்குவதற்கும், இந்த வாகனங்களை தயாரிப்பதையும் ஊக்குவிக்கும் வகையில் அரசு இந்த வாகனம் வாங்குவோருக்கு கணிசமான ஒரு தொகையை மானியமாக வழங்க முடிவெடுத்தது. இதுவே FAME (எப்ஏஎம்இ - பாஸ்டர் அடாப்ஷன் அண்ட் மேனு பேக்சர் ஆப் எலக்ட்ரிக் வெஹிகிள்ஸ்). மின்சார வாகனங்களை சுலபமாகவும் நியாயமான விலையில் வாங்கவும் இந்த திட்டம் வழிவகுக்கிறது. அரசு அறிவித்துள்ள இந்த மானியத் தொகை இன்னும் சிறிது நாட்களில் முடிந்துவிட கூடியது. எனவே மின்சார வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அதிகம் யோசிக்காமல் உடனடியாக செயல்பட இது ஒரு சரியான தருணம். பொருளாதார சிக்கனமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒருங்கே இணைந்த மின்சார வாகனம் வாங்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளோர்க்கு இதுவே சரியான தருணம்.

அரசின் இந்த பேம் 2 மானியம் என்பது வாகனத்தின் பேட்டரி திறனுடன் தொடர்புடையது மற்றும் வாகன விலையின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை உள்ளடக்கியது ஆகும். டிவிஎஸ் ஐக்யூப் சீரிஸ் வாகனங்களுக்கு பேம் 2 மூலம் கிடைக்கும் மானியத் தொகை ரூபாய் 22,065 ஆகும். எனவே ஏற்கனவே டிவிஎஸ் ஐகியூபின் 2.5 லட்சம் வாடிக்கையாளர்களின் வரிசையில் நாமும் சேர்ந்து கொள்ள கொள்வது என்பது சரியான முடிவே ஆகும். இது ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குகிறோம் என்பது மட்டும் அல்ல வருங்காலத்தில் ஒரு சுத்தமான சக்தியை மாசில்லாத சக்தியை பயன்படுத்துகிறோம் என்பதும், தற்போதைய இந்த விலையில் வாங்குவதால், சிக்கனத்தையும் கடைபிடிக்கிறோம் என்பதும் முக்கியமாகும்.

இது யோசிக்க வேண்டிய அம்சங்கள் ஆகும். ஒரு வாகனம் ஓட்டப்படும் பொழுது கடைபிடிக்க வேண்டிய ஓட்டுனர் குறிப்புகளுக்கும் மற்றும் வாகனம் எடுத்துச் செல்லும் சரக்கு எடையை பொறுத்து ஐடிசி இந்தியன் டிரைவிங் சைக்கிள் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டை கடைபிடிக்கின்றனர். அந்த கோட்பாட்டுக்குள் வரும் வாகனங்களுக்கு மட்டுமே ஏ ஆர் ஏ ஐ அல்லது ஐ சி ஏ டி என்ற தரச் சான்றிதழ் மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படுகிறது. இன்றைய உலகில் நமக்கு ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும் எனில் கிடைக்கும் தரவுகள் மிக மிக அதிகமாக இருந்தாலும் அவற்றில் சரியானது எது தவறானது எது என்பதை பாகுபடுத்த முடியாத வண்ணமே இருக்கிறது.

அந்த வகையில் பல வாகனங்களுக்கு இந்த ஐடிசி ரேஞ்ச் கொடுக்கப்படும் பொழுது நம்மால் அவற்றை வாங்க முடிவு செய்ய வசதியாக உள்ளது. டிவிஎஸ் குழுமத்திலிருந்து வரும் டிவிஎஸ்ஐ கியூ ஐ கியூப் பிராண்ட் வெளிப்படைத்தன்மையையும் நம்பிக்கையையும் அடித்தளமாக கொண்டது. இவர்கள் தங்கள் வாகனத்தைப் பற்றி உண்மையான தரவுகளை அளிக்கின்றனர்.

அந்த வகையில் ஐ க்யூப் வாகனங்கள் பேட்டரியை 3.4 kwh பேட்டரியை முழு சார்ஜ் செய்யும் பொழுது அது 100 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. ஸ்டைலான பாடி அகலமான இருக்கை இருக்கைக்கு அடியில் தாராளமாக பொருட்கள் வைக்க கூடிய பகுதி மற்றும் கிராஷ் அலர்ட், கால் நோட்டிபிகேஷன், டிஸ்டன்ஸ் டு எம்டி வாய்ஸ் அசிஸ்ட், அலெக்ஸா, ஸ்கில் செட் மற்றும் ரிமோட் சார்ஜ் ஸ்டேட்டஸ் போன்ற நூறுக்கும் மேற்பட்ட அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மார்ச் 31 2024 அன்று அரசின் ரூபாய் 22 ஆயிரத்து 65 ரூபாய் மானியம் கொடுக்கும் திட்டம் முடிவடைவதால் இன்றே உங்களின் டிவிஎஸ் ஐ க்யூப் வாகனத்தை வாங்கி பயனடையலாம்.

Tags:    

மேலும் செய்திகள்