தனிஷ்க் வழங்கும் அட்டகாசமான சலுகைகளுடன் ஆடிப் பெருக்கைக் கொண்டாடுங்கள்!
ஒவ்வொரு முறை தங்க நகை வாங்கும் போதும் இலவசமாக தங்க நாணயத்தைப் பெற்றிடுங்கள்* & வைர நகைகளுக்கு அதன் மதிப்பில் 20% வரை தள்ளுபடி;
சமாதானம், வளம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளவின்றி அள்ளித் தரும் ஒரு திருவிழாவாக நாம் கொண்டாடும் விழா 'ஆடிப் பெருக்கு'. இதற்கான சீசன் தொடங்கியுள்ளதையடுத்து, இந்தியாவின் மிகப் பெரிய சில்லறை நகை விற்பனை பிராண்டான, டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க், இந்த ஆடிப் பெருக்கை சிறப்பாக கொண்டாடிட அளவில்லாத நகை ரகங்களையும் அள்ளி வழங்கியுள்ளது.
நேர்த்தியான வேலைப்பாடும் தனித்துவமான வடிவமைப்புகளும் கலாப்பூர்வமாக இணைந்து உருவாக்கப்பட்ட நகைகளை, அதிலும் குறிப்பாக, தனது சக்திமிக்க வலிமையையும் கருணையையும் சமமாக வெளிப்படுத்தும், இன்றைய புதுமைப் பெண்ணுக்காக உருவாக்கப்பட்ட நகைகளை அனுபவிக்க, அனைவரையும் பிராண்ட் அழைக்கிறது. இந்த ஆடியில், தண்ணீருக்கும், அது வழங்கும் வாழ்க்கைப் பாடங்களுக்கும், அதற்குள்ளேயே அடங்கியிருக்கும் ஒரு பனி, ஒரு துளி, ஒரு அலை என பல்வேறு வடிவங்களில் தனிஷ்க் தனது வணக்கத்தை செலுத்துகிறது.
நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும், வளம் மற்றும் செழிப்புக்கு ஆதாரமானவர் - மேலும் உலகம் போற்றும் அமுதத்தைப் போன்றவர். பொங்கி வழியும் அருவியைப் போன்ற அவளது வலிமை, அவளது உயரிய ஆன்மா; வளைந்து நெளிந்து செல்லும் ஓடையைப் போன்ற அவளது கருணை; ஜொலிக்கும் கடல் போன்ற அவளது பிரகாசம் ஆகியவற்றை தனிஷ்க் கொண்டாடுகிறது. மாபெரும் கடல்களைப் போன்று எல்லையற்ற பொலிவுடன் திகழும் ஒவ்வொரு பெண்ணும் கருணையின் உருவகம். நேர்த்தியானதும் நீடித்து உழைக்கக் கூடியதுமான ஆபரணங்களின் மூலம், பெண்களின் எல்லையற்ற ஆன்மாவை கொண்டாடும் வகையில், அவர்களுக்காகவே இந்த சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
இந்த ஆடிப் பெருக்கு பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு முறை நகை வாங்கும் போதும் இலவச தங்க நாணயம்* மற்றும் வைர நகைகளின் மீது அதன் மதிப்பில் 20% வரையிலும் தள்ளுபடி*யையும் வழங்குகிறது. இந்த பண்டிகையை மேலும் உற்சாகமிக்கதாக மாற்றும் வகையில், வாடிக்கையாளர்கள் எந்த நகைக் கடைக்காரர்களிடமிருந்தும் வாங்கிய பழைய தங்க நகைகள் மீது 100%* பரிமாற்ற (எக்ஸ்சேஞ்ச்) சலுகையை பெறலாம். இந்த ஆடியில், நேர்த்தியான வடிவமைப்புகளை கொண்ட சிறப்பான நகைகளை வாங்கி, தனிஷ்க் உடன் சேர்ந்து, புதிதாக தொடங்கிடும் இந்த சீசனை கொண்டாடுங்கள். இந்த சலுகை 3 ஆகஸ்ட் முதல் 6 ஆகஸ்ட் 2023 வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனிஷ்க் ஸ்டோர்களிலும் செல்லுபடியாகும்*
சுத்தத்தையும் தூய்மையையும் உருவாக்கும் நீரைப் போல, தங்கமும் மனதை உன்னதமாக்கி, உடலையும் ஆன்மாவையும் தூய்மையாக்குவதாக நம்பப்படுகிறது. இந்த ஆடிப் பெருக்கில், தனிஷ்க் வழங்கும் சிறப்பு சலுகைகள் மூலம் பொருத்தமான நகைகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் அறிவார்ந்த ஆன்மாவை மேன்மையுறச் செய்யுங்கள்.
*நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டது.
தனிஷ்க் குறித்து:
தனிஷ்க் இந்தியாவில் மிக அதிகம் நேசிக்கப்படும் நகை பிராண்ட் ஆக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இது பெரும் பாரம்பரியமிக்க டாடா குழுமத்தின் ஒரு அங்கமாகும். நுணுக்கமான கைவினைத்திறன், பிரத்தியேகமான வடிவமைப்பு, உயர்தர மற்றும் உத்தரவாதமிக்க தரம் ஆகியவற்றுடன் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களிடையே நற்பெயர் பெற்றுத் திகழ்கிறது தனிஷ்க். இந்தியப் பெண்களின் நகைத் தேவைகளை மற்றும் எதிர்பார்புகளைக் கருத்தில் கொண்டு
நகைத்தொகுப்புகளை வழங்குகிறது. மேலும் இந்தியப் பெண்களின் ரசனை, விருப்பங்களுக்கு ஏற்றார் போல் பாரம்பரிய மற்றும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்றவாறு நகைகளை வடிவமைத்து விற்பனை செய்யும் தனிச்சிறப்பு மிக்க ஒரே நகை நிறுவனம் தனிஷ்க் ஆகும். .
மிகத் தூய்மையான நகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக தனிஷ்க் விற்பனையகங்களில் அதிநவீன காரட் மீட்டர்கள் உள்ளன. அவற்றில் வாடிக்கையாளர்கள் திறம்பட நகைகளின் தூய்மைத் தன்மை குறித்து பரிசோதித்து அறிந்து கொள்ளலாம். தற்போது 240-க்கும் மேற்பட்ட நகரங்களில் 400-க்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்கள் தனிஷ்கிற்கு உள்ளன.