வொண்டர்லா வழங்கும் கோடைகால சிறப்பு சலுகைகள்

இந்த சம்மர்ல வொண்டர்லா ஃபீஸ்டா - 2024 என்ற மறக்க முடியாத சிலிர்ப்பான கோடை விடுமுறையை அனுபவித்து மகிழுங்கள்!;

Update:2024-04-25 11:53 IST

கொச்சி வொண்டர்லா

இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்கா நிறுவனமான வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட், வரும் மே 31-ம் தேதி வரை வொண்டர்லா பெங்களூரு மற்றும் கொச்சி பூங்காக்களில் சம்மர்ல ஃபீஸ்டா என்ற கொண்டாட்டத்தை நடத்துகிறது.

கோடை காலம் தொடங்கிய நிலையில், வொண்டர்லாவின் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக சிலிர்ப்பூட்டும் நிகழ்வுகள், நேரடி காட்சிகள், உணவு திருவிழா, வேடிக்கை விளையாட்டுகள், டைனமிக்கான டி.ஜே செட் உள்ளிட்ட அற்புதமாக ஒருங்கிணைக்கப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை வொண்டர்லா தொகுத்து வழங்குகிறது.

கொச்சி வொண்டர்லா சமீபத்தில் அறிமுகப்படுத்திய அதன் சிலிர்ப்பூட்டும் புது நிகழ்ச்சி ஏர் ரேஸ் என்பதாகும். அதன் மூலம் உங்கள் கோடை விடுமுறை அனுபவத்தை உற்சாகம் நிறைந்த புதிய உயரங்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு திரில்லான சவாரி அனுபவம் பெற்று மகிழ்ச்சியில் திளையுங்கள்.

சுட்டெரிக்கும் கோடை வெயிலை தவிர்க்கும் வகையில் சிலிர்ப்பூட்டும் பல நிகழ்ச்சிகளை வழங்கும் வொண்டர்லா பெங்களூரு மற்றும் கொச்சி பூங்காக்களுக்கு வருகை தாருங்கள்! அதன் மூலம், வொண்டர்லாவின் தரைத்தள மற்றும் நீர் சவாரி விளையாட்டுகளின் உற்சாக அனுபவத்தை பெறுங்கள்! Recoil சவாரிகளிலோ, அமைதியான ஆறு போன்ற நீர் நிலைகளில் மிதந்தபடியோ உங்கள் உணர்வுகளில் உருவாகும் பரபரப்பை உணர்ந்து மகிழுங்கள்!

எல்லா வயதினருக்குமான கேளிக்கை மற்றும் சவாரி விளையாட்டுகளை கொண்ட வொண்டர்லா, அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் மகிழ்ச்சியான, பிரத்யேக தருணங்களை அளிக்க தயாராக உள்ளது. அப்படிப்பட்ட அதிரடியான, கிளர்ச்சியூட்டும் விளையாட்டு அனுபவங்களை பெற்று இந்த கோடைகால நினைவுகளை மறக்க முடியாதபடி ஆக்க தயாராகுங்கள்.

வாடிக்கையாளர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தும் விதமாக வொண்டர்லா பலவித கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை அவர்களுக்கு அளிக்கிறது. அவ்வகையில் வொண்டர்லா மீண்டும் தனது ஹால் டிக்கெட் சலுகை என்பதை வழங்குகிறது.

இந்த சலுகை மூலம் 2023-2024 கல்வியாண்டில் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை எழுதிய மாணவ, மாணவியர்கள் தங்கள் அசல் தேர்வு ஹால் டிக்கெட்டுகளை காண்பிப்பதன் மூலம், வொண்டர்லா பூங்கா நுழைவு டிக்கெட்டுகளுக்கு 35% தள்ளுபடி பெறலாம். இந்த சலுகையை ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் அல்லது பூங்காக்களுக்கு நேரடியாக சென்று நுழைவுச்சீட்டை வாங்கும் மாணவ, மாணவிகளின் ஹால் டிக்கெட்டை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், வொண்டர்லா பூங்காக்களில் கல்லூரி மாணவ, மாணவியர் கேளிக்கை விளையாட்டுகளில் பங்கேற்று மனம் மகிழும் வகையில் பிரத்யேக சிறப்பு காம்போ சலுகை அளிக்கப்படுகிறது. இச்சலுகை மூலம் கல்லூரி மாணவ, மாணவியர்கள் நுழைவுச்சீட்டு மற்றும் உணவு ஆகியவற்றை வார நாட்களில் ரூ.1650 என்ற சலுகை கட்டணத்தில் பெறலாம். வார இறுதி நாட்களில் ரூ. 1710 என்ற சலுகை கட்டணத்தில் பெறலாம். 16 முதல் 24 வயது கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் ஆன்லைன் பதிவு அல்லது நேரடி நுழைவுச்சீட்டு பெறும்போது தங்கள் கல்லூரி அடையாள அட்டையை காண்பித்து இச்சலுகை கொண்ட நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், 3 நாட்களுக்கு முன்னதாகவே அட்வான்ஸ் புக்கிங் செய்யும் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் வொண்டர்லா, அவர்களது நுழைவு சீட்டுக்கு 10% தள்ளுபடி அளிக்கிறது. ஆன்லைனில் 3 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ADV03DAYS என்ற விளம்பர குறியீட்டை (பிரமோ கோடு) பயன்படுத்தி 10% தள்ளுபடி பெறலாம்.

ஏப்ரல் மாதத்தில் பிறந்த வொண்டர்லா வாடிக்கையாளர்கள், ஏப்ரல் மாதத்தில் 'ஒன்று வாங்க, ஒன்று இலவசம்' என்ற சலுகையை பெறலாம்; அதேபோல், மே மாதத்தில் பிறந்த விருந்தினர்கள், மே மாதத்தில் 'ஒன்று வாங்க, ஒன்று இலவசம்' என்ற சலுகையை பெறலாம். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து, அவர்களுக்கான இலவச நுழைவுச்சீட்டு பெறலாம். https://www.wonderla.com/offers/birthdays-offer-buy-1-get-1-free.html

 

பெங்களூரு வொண்டர்லா

பெங்களூரு வொண்டர்லா தங்கள் வாடிக்கையாளர்களுக்க பி.எம்.டி.சி என்ற சலுகையை வழங்குகிறது. இந்த சலுகை மூலம் பெங்களூரு வாடிக்கையாளர்கள் தாங்கள் பயணம் செய்த பி.எம்.டி.சி வோல்வோ பஸ் டிக்கெட்டை காண்பித்து நுழைவுச்சீட்டு கட்டணத்தில் 15% தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் தங்களது தங்குதடையற்ற கேளிக்கை அனுபவம் பெறுவதை முன்கூட்டியே உறுதி செய்யும் வகையில் வொண்டர்லா நுழைவுச்சீட்டுகளை https://bookings.wonderla.com/ என்ற ஆன்லைன் போர்ட்டல் மூலம் அல்லது நேரடியாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் தகவல்களை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்

வொண்டர்லா பெங்களூரு - +91 80372 30333, +91 80350 73966.

வொண்டர்லா கொச்சி பூங்கா - 0484 -3514001, 75938 53107.

இந்த கோடைகால விடுமுறையை சிலிர்ப்பு, மகிழ்ச்சி மற்றும் வேடிக்கைகள் நிறைந்த மறக்க முடியாத அனுபவமாக ஆக்கும் சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்க வொண்டர்லாவுக்கு வருகை தாருங்கள்!

Full View
Tags:    

மேலும் செய்திகள்