கல்யாண் ஜூவல்லர்ஸ் வழங்கும் கோயில் நகை தொகுப்பு : 4 கட்ட உத்தரவாதம், பாரம்பரியத்தை தழுவி பிரத்தியேகமாக வடிவமைப்பு...!
கல்யாண் ஜூவல்லர்ஸ் வழங்கும் கோயில் நகை தொகுப்பு : 4 கட்ட உத்தரவாதத்துடன் பாரம்பரியத்தை தழுவி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது.;
சென்னை,
கோயில் நகைத் தொகுப்பு (Temple jewellery) என்பது தென்னிந்தியாவில் கிபி 9-ம் நூற்றாண்டுக்கு முந்தைய வளமான வரலாற்றைக் கொண்ட பிரமிக்க வைக்கும் நுணுக்கமான கைவேலைப்பாடுகளால் செய்யப்ப்ட்ட நகை பாணியாகும். தொடக்கத்தில், கோயிலில் உள்ள தெய்வங்களின் சிலைகளை அலங்கரிக்க நகைகள் செய்யப்பட்டன. ஆனால் காலப் போக்கில் சிலைகளில் உள்ள ஆபரணங்களின் பாணியில் செய்யப்பட்ட நகைகளை, கோயிலில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அரச குடும்பத்தாரும், பார்வையாளர்களும் அணியத் தொடங்கினர். இந்த வடிவமைப்புகள் இன்றைய கால கட்டத்தில் இந்திய பெண்களின் திருமண நகை தொகுப்புகளின் ஒரு அங்கமாக மாறியது. பெரும்பாலான மணப்பெண்களின் தேர்வாக கோயில் நகைத் தொகுப்புகள் அமைகின்றன, மேலும் விசேஷ வைபவங்களின் போதும் இவை அணியப்படுகின்றன.
பாரம்பரியமிக்க கோயில் நகைகளை உருவாக்கும் செயல்முறைக்கு திறமை, துல்லியம், ஒவ்வொரு வடிவமைப்பின் பின்பும் உள்ள உள்ளார்ந்த குறியீட்டினை குறித்த புரிதல் ஆகியவை அத்தியாவசியமான தேவையாக உள்ளன. நகைகளை வடிவமைப்பதில் தொடங்கி பல்வேறு கட்டங்களை உள்ளடக்கியதாக கோயில் நகை உருவாக்கம் உள்ளது. பெரும்பாலும் இந்த நகைகளின் வடிவமைப்புகள் பண்டைய இந்து வேதங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். மேலும் ஒவ்வொரு நகையும் ஆழமான அர்த்தத்தையும், மரபை வெளிப்படுத்தும் அடையாளத்தையும் கொண்டவையாகும். அடுத்த கட்டம் புடைப்பு சிற்பப் பாணியிலானதாகும். ஒரு மெல்லியத் தங்கத் தகடு உருகிய மெழுகின் அடித்தளத்தில் வைக்கப்பட்டு, அந்த மெல்லியத் தங்கத் தகடில் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட வடிவமைப்பு புடைப்பு சிற்பப் பாணியில் பொறிக்கப்படுகிறது. அதன் பின்னர் விலையுயர்ந்த மற்றும் மதிப்புமிக்க கற்கள் பதித்து, அலங்கரிக்கப்பட்டு மெருகூட்டப்பட்டு அதன் பூரணத்துவத்தை அடைகின்றன.
காலங்காலமாக கைவேலைப்பாடுகளால் செய்யப்பட்டு வரும் கோயில் நகைகளை தங்கத்தில் செய்வதற்கு மிகுந்த அர்ப்பணிப்பும், நுணுக்கமான திறமையும் தேவையாக உள்ளது. நகைகள் தயாரிப்பில் மிகவும் திறமைவாய்ந்த மூத்த கைவினைஞர்கள் ஈடுபடுத்தப்படுவதன் மூலம், முடிவில் பல்வேறு வடிவங்களின் கலவைகள் நிறைந்ததாக இந்தியாவின் வளமான பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறனின் அடைடயாளமாக திகழும் கலைப் படைப்பாக மிளிர்கின்றன.
ஒரு கோவில் நான்கு முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது : கர்ப்பகிரஹம் (சன்னிதி) [garbhagriha (the sanctum)], பிரதக்ஷிணபாதம் (பிரகாரம்) [pradakshinapatha (the circumambulation passage)], அந்தரலா (அர்த்த மண்டபம்) [antarala (the antechamber next to sanctum)], மண்டபம் (பக்தர்கள் கூடும் இடம் [mandapa (the gathering hall)]. இதனால் தாக்கம் பெற்ற கல்யாண் ஜூவல்லர்ஸ், தங்கத்தின் தூய்மை, தயாரிப்பு தகவல், பரிமாற்ற நகைகளின் மதிப்பு, நகைகளின் மறுவிற்பனை மதிப்பு, வாழ்நாள் பராமரிப்பு ஆகிய 4 கட்ட உத்தரவாதங்களை [Kalyan Jewellers' 4-Level Assurance] உள்ளடக்கியுள்ளது.
நியாயமான வெளிப்படையான வணிக நடைமுறைகளுக்கு ஏற்ப, கல் பதிப்பதற்குப் பயன்படுத்தப்படும் அரக்கு, ரத்தினக் கற்கள், கண்ணாடி, மரம், எனாமல் பூச்சு போன்ற பிற பொருட்களின் எடை கழிக்கப்படுகிறது. அதற்கு பிறகு பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்புக்கு மட்டுமே வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பான அனைத்து தகவல்களையும் அளிக்கக் கூடிய தயாரிப்பு தகவல் பிரிவை கொண்ட ஒரே பிராண்டாக கல்யாண் ஜவல்லர்ஸ் திகழ்கிறது. இந்த உத்தரவாதமானது நகைகளின் பரிமாற்றம், நகைகளின் மறுவிற்பனை ஆகியவற்றிற்கு மதிப்பு அளிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு இயன்றவரை மிகச் சிறந்த பலனை அளிப்பதையும் உறுதி செய்கிறது
இந்த 4 கட்ட உத்தரவாதத் திட்டமானது [Kalyan Jewellers' 4-Level Assurance], பரிமாற்றம் அல்லது நகைகளின் மறு விற்பனையின் போது விலைப்பட்டியலில் குறிப்பிட்டுள்ள நகைகளின் தூய்மையின் மதிப்புக்கு பணம் செலுத்துவதை உறுதி செய்கிறது. இந்தியாவில் உள்ள எந்தவொரு தங்களது ஷோரூமிலும் வாங்கும் ஆபரணங்களுக்கு இலவச ஆயுட்கால பராமரிப்பை கல்யாண் ஜூவல்லர்ஸ் வழங்குகிறது. இதன் மூலம் நகைகளின் உரிமையாளர்களுக்கு தங்கள் நகைகள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன என்ற மன நிம்மதியை அவர்களுக்கு அளிக்கிறது.
கோயில் நகைகள் தயாரிப்புத் துறையில், தரம், கைவினைத்திறன், வாடிக்கையாளர்களின் திருப்தி ஆகிய ஒவ்வொன்றிலும் கல்யாண் ஜூவல்லர்ஸின் அர்ப்பணிப்பு தெளிவாக தென்படுகிறது. தங்கம், வைரங்கள், ரத்தினங்கள் போன்ற பாரம்பரிய மற்றும் சமகால நகை வடிவமைப்புகளின் பல்வேறு வகையிலான அணிவகுப்பு ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. நான்கு கட்ட உத்தரவாதத்துடன், சிறந்த மதிப்பு, தரம், சேவை ஆகியவற்றை வழங்குவதாக கல்யாண் ஜூவல்லர்ஸ் உறுதியளிக்கிறது. மேலும் பிராண்டின் வாடிக்கையாளர்கள் தங்களது கோயில் நகைகளை பல ஆண்டுகள் வைத்திருந்து சிறப்பான அனுபவத்தை பெற முடியும். நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தொடர்ந்து சிறப்பானமுறையில் முயன்று வருவதில் கல்யாண் ஜூவல்லர்ஸ் எப்போதும் ஒரு முன்னோடி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
அதன் முற்றிலும் புதிய ஹால்மார்க் முத்திரை சான்றை (HUID) மையப்படுத்தும் முன்முயற்சியின் ஒரு பகுதியாக இப்போது பிராண்டின் வாடிக்ககையாளர்கள் இந்தியாவில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரூமிற்கு தங்களுக்கு வசதிக்கேற்ப சென்று தங்களுடைய பழைய ஹால் மார்க் செய்யப்பட்ட நகைகளுக்கு இலவசமாக முற்றிலும் புதிய ஹார்மார்க் முத்திரை சான்றை (HUID) பெறலாம். மேலும் கூடுதலாக, புதிய ஹால் மார்க் முத்திரை சான்றுடன்(HUID) கூடிய பரந்து பட்ட கல்யாண் ஜூவல்லர்ஸின் நேர்த்தியான நகைத் தொகுப்புகளிலிருந்து, பழைய தங்கத்தை எக்சேஞ்ச் செய்து கொள்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்பையும் கல்யாண் ஜூவல்லர்ஸ் வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு திருப்தியை அளிப்பதற்கான அர்ப்பணிப்பில் மாறுபட்டதாகவும், வாடிக்கையாளரை மையமாகக் கொண்டதும் நம்பகத்தன்மை கொண்டதுமான ஜூவல்லரி பிராண்டாகவும் நகைச் சந்தையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
Graphics Box:
விரிவான செயல்முறைகள்
நகைகளை வடிவமைத்தல் :
கோயில் நகைகளை தயாரிப்பதில் முதல் கட்டம் நகைகளை வடிவமைப்பதாகும். பொதுவாக பண்டைய இந்து வேதங்களின் தாக்கத்தால் இதன் வடிவமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு நகையும் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தையும் அடையாளத்தையும் கொண்டதாக இருக்கும். வடிவமைப்புகள் முதலில் காகிதத்தில் வரையப்படுகின்றன.
புடைப்பு சிற்ப பாணி:
ஒரு மெல்லியத் தங்கத் தகடு உருகிய மெழுகுத் தளத்தில வைக்கப்பட்டு காகித வடிவமைப்பு அதன் மீது வைக்கப்படுகிறது. சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, வடிவமைப்பு தங்கத் தகடில் பொறிக்கப்பட்டு, மென்மையாகவும் நேர்த்தியாகவும் ஒரு தடையற்ற இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.
அலங்காரம் :
நகைகளின் அடிப்படை வடிவம் உருவாக்கப்பட்டவுடன், விலையுயர்ந்ததும் மதிப்புமிக்கதுமான கற்கள் ஆகியன சிறிய ஊசிகள், கவ்விகளைக் கொண்டு மிகவும் கவனமாக தங்கத்தில் பதிக்கப்படுகின்றன. இந்த கற்கள் அவற்றின் நிறம், துல்லியம், அளவு ஆகியவற்றிற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஒரு பிரமிக்கத்தக்க ஆச்சர்யத்தை உருவாக்கும் வகையில் அவை பெரும்பாலும் மிகவும் நுணுக்கமான வடிவங்களில் பதிக்கப்படுகின்றன.
மெருகேற்றல் :
இந்த செயல்முறையின் இறுதிக்கட்டம் மெருகூட்டலாகும். இதில் நகைகளை ஜொலிக்கும் வகையில் பளபளப்பான தன்மையை அடைவதற்காக மென்மையாக்குதல் மற்றும் ஒளிரூட்டுதல் ஆகிய செயல்முறைகள் நடைபெறும். இவற்றை மேற்கொள்வதற்கு அதிக திறனும் மிகுந்த கவனமும் தேவை. மேலும் இந்த செயல்முறையின் மூலம் மென்மையானதும் கச்சிதமானதுமான இறுதி வடிவை அடைவதற்காக மீதமுள்ள குறைபாடுகளும் அகற்றப்படுகின்றன.