ஹெர்பலைஃப் இந்தியா அதிகாரப்பூர்வமான தயாரிப்புகளை வாங்குவதற்கான அதிகாரப்பூர்வ சேனல்களை அறிவிக்கிறது
ஹெர்பாலைஃப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஹெர்பாலைஃப் இன்டிபென்டென்ட் அசோசியேட்கள் மூலமாக அதன் உண்மையான தயாரிப்புகளை வாங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.;
முன்னணி ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வு நிறுவனமான ஹெர்பாலைஃப் இந்தியா, அதன் தயாரிப்புகள் பற்றி பரவிவரும் தவறான தகவல்கள் மற்றும் அதிகரித்து வரும் அங்கீகரிக்கப்படாத விற்பனை குறித்தும் எச்சரிக்கையாக இருக்குமாறு அதன் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. அதன் இன்டிபென்டென்ட் அசோசியேட்களின் நெட்வொர்க் மூலமாக மட்டுமே உண்மையான ஹெர்பாலைஃப் தயாரிப்புகளை வாங்க முடியும் என்று அந்நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் 94 இதர நாடுகளில் ஹெர்பாலைஃபின் தயாரிப்புகள் அதன் இன்டிபென்டென்ட் அசோசியேட்களின் நெட்வொர்க் மூலமாக பிரத்தியேகமாக கிடைக்கிறது. அதன் இந்த நேரடியான விற்பனை வணிக முறையின் மூலம், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தயாரிப்புகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது, மற்றும் அதன் இன்டிபென்டென்ட் அசோசியேட்களின் நெட்வொர்க்கிடமிருந்து தனிப்பயனாக்கப்பட்ட பிரத்தியேக ஆதரவை வழங்கி அவர்கள் தங்கள் உடல்நல இலக்குகளை எட்ட உதவ வேண்டும் என்பதே ஹெர்பாலைஃபின் நோக்கமாகும்."
"அங்கீகரிக்கப்படாத வலைத்தளங்களில் 'ஹெர்பாலைஃப் இன்டிபென்டென்ட் அசோசியேட்' என்று குறிப்படப்பட்டிருந்தாலோ அல்லது ஹெர்பாலைஃபின் முகவரி அல்லது அதுபோன்ற அடையாங்களுடனோ விற்பனை செய்யப்படும் அல்லது காட்சிப்படுத்தும் தயாரிப்புகள் அல்லது ஏமாற்று நோக்குடன் போலியாக சித்தரிக்கப்பட்ட ஹெர்பாலைஃப் போன்ற வலைத்தளங்கள் குறித்தும், அதுபோன்ற தவறான தகவல்கள் குறித்து நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஹெர்பாலைஃப் மற்றும் அதன் தயாரிப்புகள் பற்றிய அங்கீகரிக்கப்படாத பயிற்சிகள், சேவைகள் மற்றும் தவறாக வழிநடத்தும் தகவல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கமாறும் அந்நிறுவனம் அதன் நுகர்வோரை வலியுறுத்துகிறது. ஹெர்பாலைஃப் இந்தியா நிறுவனமானது மற்ற இணையவழி விற்பனை தளங்கள் / வலைத்தளங்களில் காண்பிக்கப்படும் தகவல்களின் துல்லியத்தன்மைக்காகவும், அவற்றில் விற்பனை செய்யப்படும் தயாரிப்புகள் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது" என்று ஹெர்பாலைஃப் அதன் அறிக்கையில் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஹெர்பாலைஃப் நிறுவனம் பற்றிய விவரங்கள்
ஹெர்பாலைஃப் (Herbalife NYSE: HLF) என்பது ஒரு உயர்தரமான உடல் நலன் மற்றும் ஊட்டச்சத்து நிறுவனமாகும்; 1980-ஆம் ஆண்டு முதல் ஹெர்பாலைஃப் சமூகமானது தமது அற்புதமான ஊட்டச்சத்து தயாரிப்புகளின் மூலம் மக்களின் வாழ்வினை மாற்றி வருவதோடு, அதன் இன்டிபென்டென்ட் அசோசியேட் ஒரு தொழில் வாய்ப்பினை வழங்கி வருகிறது. அறிவியல் பூர்வமாக ஆதரிக்கப்படும் தயாரிப்புகளை இந்நிறுவனம் அதன் நுகர்வோருக்கு 95 நாடுகளின் சந்தையில் உள்ள அதன் தொழில்முனைவோர் விநியோகிஸ்தர்கள் மூலமாக வழங்கி வருகிறது; அவர்கள் நுகர்வோருக்கு நேரடியான தனி-நபர் பயிற்சியை வழங்குகின்றனர். மேலும், ஹெர்பாலைஃபின் ஆதரவளிக்கும் சமூகமானது - அதன் வாடிக்கையாளர்களை ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான அன்றாட செயல்பாடுகளுடன் கூடிய ஒரு நல்வாழ்வினை பின்பற்ற ஊக்குவிக்கிறது.