கோல்டு வின்னர் - அம்மாக்களின் நம்பிக்கை

Update:2024-09-26 19:44 IST

கோல்டு வின்னர் நிறுவனத்தார், ஒவ்வொரு அம்மாவும் குடும்பம் மீது காட்டும் வெளியில் தெரியாத அன்பு மற்றும் பாசம் குறித்த ஒரு வீடியோ காட்சியை விளம்பரமாக வெளியிட்டு புதுமை படைத்துள்ளார்கள். மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அந்த விளம்பரம் குறித்த விபரங்கள் கீழே வருமாறு:-

அம்மாக்கள்தான் இந்த உலகின் தலைசிறந்த ரிசர்ச்சர்ஸ்-ஆக அதாவது ஆராய்ச்சியாளர்களாக இருக்கிறார்கள். தங்களுடைய சின்னக் குழந்தைகளுக்கு தேவையான போஷாக்கு மிக்க உணவை கவனமாக தயார் செய்கிறார்கள். பொருத்தமான ஆடைகளை கடைகடையாக தேடிப் பார்த்து வாங்குகிறார்கள். சிறந்த பள்ளியில் அவர்களை சேர்த்து படிக்க வைக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் சிறந்தவர்களாக வளர வேண்டும் என்பதில் அம்மாக்கள் கவனமாக இருக்கிறார்கள்.

அந்த வகையில் உலகின் மிகச்சிறந்த ரிசர்ச்சர்ஸ்-ஆக உள்ள அம்மாக்கள் கோல்டு வின்னரை தங்கள் குடும்பத்துக்கான சிறந்த சமையல் எண்ணெயாக தேர்வு செய்ததில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

அப்படிப்பட்ட அம்மாக்களுடைய ஆராய்ச்சிகள் குறித்து கோல்டு வின்னர் நிறுவனம் சமீபத்தில் "வேர்ல்ட்ஸ் பெஸ்ட் ரிசச்சர்ஸ்: அம்மாக்கள்" என்ற ஒரு விளம்பரத்தை உணர்ச்சி பூர்வமான கதைக்களத்தின் பின்னணியில் கண்கவரும் வகையில் காட்சிப்படுத்தி உள்ளனர்.

அந்த விளம்பரத்தில் ஒவ்வொரு அம்மாவும் தங்களுடைய குடும்பத்திற்காகவும் தங்களுடைய அன்பு குழந்தைகளுக்காகவும் கவனமாக ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்வதை மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

உண்மையில் அம்மாக்கள் என்றாலே தங்களுடைய குழந்தைகள் மற்றும் குடும்ப சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் செய்வதற்கு முன்னதாக பல ஆராய்ச்சிகள் செய்த பின்னரே அதைச் செய்யும் முடிவை எடுக்கிறார்கள்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து இல்லங்களின் சமையலறையில் தவிர்க்க இயலாத ஒரு அங்கமாக வடிவெடுத்துள்ள கோல்டுவின்னர், அம்மாக்களின் அந்த நற்குணத்திற்கு ஏற்ற நம்பிக்கை தரும் வகையில் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் 80 விதமான தரக்கட்டுப்பாட்டு செயல்முறைகளை (80 Quality Checks) கடைப்பிடித்த பின்னரே ஒவ்வொரு கோல்டு வின்னர் பாக்கெட்டும் அம்மாக்கள் கைகளில் தவழ்கின்றன. அதன் மூலம் அந்த குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் ஆனந்தம் ஆகியவற்றுக்கு கோல்டு வின்னர் உத்தரவாதம் அளிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், கோல்டு வின்னர் United State Food and Drug Administration (USFDA) அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தையும் பேணிக்காக்கும் வேர்ல்ட்ஸ் பெஸ்ட் ரிசச்சர்ஸ்-ஆன அம்மாக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றதாகவும் கோல்டு வின்னர் உள்ளது.

ஒரு குடும்பம் அம்மாவின் அன்பு கலந்த அக்கறையால் வளரும் பொழுது அது எவ்வளவு ஆரோக்கியமாக, ஆனந்தமாக இருக்கிறது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அந்த விளம்பரம் உள்ளது. அந்த வகையில் கோல்டு வின்னர் அம்மாக்கள்தான் இந்த உலகின் தலைசிறந்த ரிசர்ச்சர்ஸ் என்ற வெளிப்படையான, அதிகம் பேசப்படாத உண்மையை நம்மிடம் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதன் மூலம் அம்மாக்களின் அன்பு, அக்கறை, உத்வேகம், விடாமுயற்சி ஆகியவற்றிற்கு கோல்டு வின்னர் தன்னுடைய விளம்பரத்தின் மூலம் ஒரு சிறந்த அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறது.

 

மேலும் செய்திகள்