டிரைவ்X, வடபழனியில் அதன் 8-வது ஸ்டோரை துவங்கியுள்ளது
இந்தியாவின் முதல் ஃபார்முலா டிரைவரும் டிரைவ்X நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. நரேன் கார்த்திகேயன் ஸ்டோரை துவங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆட்டோமொபைல் ரசிகர்கள் கலந்துகொண்டனர்;
சென்னை, 30 ஆகஸ்ட் 2024:
இந்தியாவில் ப்ரீ-ஓண்ட் டூ-வீலர் துறையில், வாடிக்கையாளர்களின் தனித்துவமான தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே டிஜிட்டல் ஆட்டோ-டெக் நிறுவனமான டிரைவ்X, இந்த ஆகஸ்ட் மாதம் 22 அன்று சென்னை, வடபழனியில் தங்களது 57-வது டூ-வீலர் ஷோரூம் துவங்கியதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
வடபழனியில் ஸ்டோர் அறிமுகமானது அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சிகரமான தருணம், ஏனெனில், டிரைவ்X-இன் இந்த வடபழனி ஸ்டோர், தென்னிந்தியாவின் 8-வது மற்றும் சென்னையின் 2-வது நேரடி விற்பனை மையமாக்குகிறது. சென்னையின் முதல் ஸ்டோர் பூந்தமல்லியில் அமைந்துள்ளது.
டிரைவ்X-இன் இந்த புதிய கிளை வடபழனி மற்றும் அதன் சுற்றுப்புற வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற முறையில் சிறந்த சேவை வழங்க ஏதுவாக, 100 அடி ரோடு, பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ளது.
இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 டிரைவரும், டிரைவ்X நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு நரேன் கார்த்திகேயன் ஸ்டோரை துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆட்டோமொபைல் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
டிரைவ்X-இன் இந்த முக்கிய தருணத்தில், அதன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், திரு நரேன் கார்த்திகேயன், தனது சிந்தனைகளை பகிர்ந்துள்ளார். "சென்னையில் வடபழனியில் டிரைவ்X-இன் 8-வது நேரடி விற்பனை மையத்தின் அமைப்பு, எங்களுக்கு மிகவும் பெருமையான தருணமாகும். ஆட்டோமொபைல் துறையில் சென்னையின் பங்களிப்பு மறுக்க முடியாதது. எனவே, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் தரமான டூ-வீலர்ஸ் தருவது என்பது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது." என்று கூறினார்.
"எங்கள் சென்னை ஸ்டோர், டிரைவ்X-இன் விரிவாக்கப் பயணத்தில் ஒரு பாகம் மட்டுமே. நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஸ்டோர் எங்கள் ஒப்பிடமுடியாத வாடிக்கையாளர் சேவையின் தெளிவான உதாரணம். நேரடியாக நிர்வகிப்பதன் மூலம், ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் நம்பகமான சேவை அளிக்கப்படும்." என்றும் திரு நரேன் கார்த்திகேயன் தெரிவித்தார்.
டிரைவ்X அறிமுகம்:
டிரைவ்X இந்தியாவில் ப்ரீ-ஓண்ட் டூ-வீலர் துறையில், வாடிக்கையாளர்களின் தனித்துவமான தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே டிஜிட்டல் ஆட்டோ-டெக் நிறுவனம். இந்த நிறுவனம், அதன் இயக்குநரான திரு நரேன் கார்த்திகேயன் அவர்களின் பலவருட வாகனத் தொழில்நுட்ப அனுபவத்தின் அடித்தளத்தில் உருவானது.
டிரைவ்X தனது நேரடி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டீலர் விற்பனை மையங்கள் மூலம் இந்தியாவின் அணைத்து பகுதிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வாகனங்களுக்கு நிகரான தரத்தில் புதுப்பிக்கப்பட்ட வாகனங்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த இலக்கை அடைய, டிரைவ்X தனது தொழில்நுட்பங்களின் மூலம், வாகனங்களின் நிலை மற்றும் விலை நிர்ணயித்தல், வாட்ஸாப்ப் வீடியோ மூலம் வாகனத்தை வீட்டில் இருந்தபடி ஆராய்தல் , இணையதளத்தின் வாயிலாக டெஸ்ட்-டிரைவ் விண்ணப்பித்தல், மற்றும் ப்ரீ-ஓண்ட் டூ-வீலர் துறையில் யாரும் அளித்திடாத சிறந்த நிதி உதவி, இலவச வாரண்டி போன்ற பல தனித்துவமான அம்சங்களுடன் வேகமாக வளர்ந்து வருகிறது.