93 வயது முதியவருக்கு பார்வதி மருத்துவமனையில் திறமையான எலும்பு முறிவு சிகிச்சை
தமிழ்நாட்டுக்கு வந்தவரை அன்பு கரத்தோடு வரவேற்று சரியான சிகிச்சையை உடனடியாக மேற்கொண்டு அவருக்கு இழந்த ஆரோக்கியத்தை மீட்டு தந்திருக்கிறது பார்வதி மருத்துவமனை.;
ஒரு எலும்பு முறிவு சிகிச்சைக்காக இவர் கடல் கடந்து சென்னையின் பார்வதி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். ஏன் தெரியுமா?
வயதான காலத்தில் கடல் கடந்து தன் மகனின் வீட்டிற்கு சென்றவர் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு அதிக வலி வேதனையில் இருக்கிறார். அவரின் கஷ்டத்தை போக்க சிங்கப்பூரின் பெரிய மருத்துவமனைகளை நாடுகிறார் மகன். 93 வயது, இதய நோய், சிறுநீரக பிரச்சனையுள்ளவர் சிகிச்சையை தாங்க மாட்டார் என்று கூறி கை விரித்து விடுகின்றன அங்குள்ள மிகப் பெரிய மருத்துவமனைகள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தன் நண்பரின் மூலம் பார்வதி மருத்துவமனை -யின் தலைசிறந்த ஆர்த்தோ சிகிச்சை பற்றி தெரிந்துகொண்டு தனது தந்தையை மிகுந்த நம்பிக்கையோடு சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வந்திருக்கிறார் அவரது மகன்.
தமிழ்நாட்டுக்கு வந்தவரை அன்பு கரத்தோடு வரவேற்று சரியான சிகிச்சையை உடனடியாக மேற்கொண்டு அவருக்கு இழந்த ஆரோக்கியத்தை மீட்டு தந்திருக்கின்றனர் பார்வதி மருத்துவமனை -யின் மருத்துவர்கள். இத்தகைய மனிதநேயமிக்க மருத்துவர்களை, சவால்களை சந்திக்க விரும்பும் மருத்துவர்களை மருத்துவத்துறையின் சொத்து என்று கூறலாம் . ஆம்!! இந்த சாதனையை சாத்தியமாக்கியது இந்த மருத்துவமனையில் எலும்பு மற்றும் ஆபத்துக் கால அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணரான மருத்துவர் அருண் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மருத்துவர் குழு ஆகும்.
93 வயதான அபூ ஹமீது அவர்கள் சிங்கப்பூரில் உள்ள தன் மகன் வீட்டில் தங்கி இருக்கும் பொழுது துரதிர்ஷ்டவசமாக கீழே விழுந்து அவருடைய தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இவருடைய மகன் அமீநுல்லாஹு அவர்கள் தன் குடும்ப மருத்துவர் மற்றும் நண்பரின் பரிந்துரையை ஏற்று சென்னையில் உள்ள தலை சிறந்த மருத்துவமனையான பார்வதி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
சவாலான சிகிச்சை
இங்கு எக்ஸ்ரே மற்றும் இதர ஆர்த்தோ பரிசோதனைகளை செய்து அவருக்கு இன்டர்ட்ரோ சான்டரிக் பிராக்சர் என்று அழைக்கப்படும் எலும்பு முறிவு அவருடைய இடது தொடை எலும்பில் ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். இப்படிப்பட்ட எலும்பு முறிவு மிகவும் சிக்கலானது. தொடையும் இடுப்பும் சேரும் இடத்தில் அதிகமான வலி இருக்கும். இதற்கான சிகிச்சையை சரியாக திட்டமிட்டு சிறப்பாக செய்ய வேண்டும். அந்த முறிவை சரி செய்ய க்ளோஸ்ட் ரிடக்ஷன் இன்டர்னல் ஃபிக்சேசன் (PFN) சர்ஜரி என்ற முறையில், முறிவு ஏற்பட்ட இடத்தை திறக்காமல் ராட் மற்றும் ஸ்க்ரூக்களை நுழைத்து எலும்பு முறிவை மிக திறமையாக சரி செய்தனர் மருத்துவர் அருண் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மருத்துவர் குழுவினர்.
கனிவான & தரமான சிகிச்சை
சிகிச்சைக்கு பின்பு பிசியோதெரபி நிபுணர் குழுவும் மற்றும் மருத்துவமனையின் செவிலியர்களும் அன்பாகவும் சிறப்பாகவும் அவருக்கு கொடுத்த கவனிப்பு மற்றும் சிகிச்சையினால் குணமடைந்து மீண்டும் விமான பயணம் மேற்கொண்டு தன் மகன் வீட்டிற்கு சிங்கப்பூருக்கு திரும்பி சென்றுள்ளார் அபூ ஹமீது அவர்கள்.
நுணுக்கமான அறுவை சிகிச்சை என்றாலும் உலக தரத்தில் மேற்கொண்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்ததோடு நோயாளிக்கு மனதிலும் புத்துணர்வை ஏற்படுத்தி அவரை சார்ந்தவர்களுக்கும் தைரியத்தை கொடுத்த பார்வதி மருத்துவமனை அனைவராலும் பாராட்டப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து தந்தையும் மகனும் அவர்கள் நாட்டிற்குச் செல்லும் பொழுது கண்கள் பனிக்க நன்றி கூறி விடை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆர்த்தோ மற்றும் இதர மருத்துவ சிகிச்சை சார்ந்த கேள்விகள் & முன்பதிவுக்கு : 044 2238 2248 | 044 2221 1111