இன்றைய ராசிபலன் - 04.06.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;

Update:2024-06-04 06:15 IST

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் வைகாசி மாதம் 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை

நட்சத்திரம்: இன்று இரவு 10.18 வரை பரணி பின்பு கார்த்திகை

திதி: இன்று இரவு 9.34 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 7.30 - 8.00

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் மாலை: 03.00 - 04.30

எமகண்டம் காலை: 09.00 - 10.30

குளிகை பிற்பகல்: 12.00 - 1.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் பிற்பகல்: 7.30 - 8.30

சூலம் : வடக்கு

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்

ராசிபலன்

மேஷம்

அவசர தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். ஆடல், பாடல் கலைத் துறையினருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் தரும். ஆன்மீக செலவுகளுக்கும் இடம் உண்டு. பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும்.

அதிர்ஷ்டநிறம் : கிரே

ரிஷபம்

தேவையில்லாத மனபயம் விலகும். திருமணம் கோலாகலமாக நடக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டநிறம் : கடல்நீலம்

மிதுனம்

உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர் வெளிநாடு செல்வர். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். நட்பால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

கடகம்

பிள்ளைகள் நன்கு படிப்பர். உணவு விசயத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். காய்கறி வியாபாரிகள் பயனடைவர். கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். அமைதியை காத்தால் தப்பிக்க முடியும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

சிம்மம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாளாக அமைகிறது. ஆதலால், யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொதுவாக இன்று அமைதி காப்பது நல்லது. இறைவனை மட்டும் வழிபடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

கன்னி

யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் நலம் விசாரிப்பர். சேமிப்பு உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை. எதிரிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பர். பிரிந்திருந்த தம்பதிகள் இணைவர்.

அதிர்ஷ்டநிறம் : கடல்நீலம்

துலாம்

உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

விருச்சிகம்

நட்பு வட்டம் விரிவடையும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். சிலருக்கு புது இடத்தில் வேலை கிடைக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. நம்பிக்கைக்குரியவரை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

தனுசு

பயணங்களின் போது கவனம் தேவை. வியாபாரம் சாதகமாக இருக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வெறுத்துச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். உத்யோகஸ்தர்கள் வெளியூர் மாற்றலாவர். உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

மகரம்

வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். உடல் நலம் தேறும். பணப் புழக்கம் மிகும். புது ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாணவர்களின் அலட்சியபோக்கு நீங்கும். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

கும்பம்

அரசியலில் நாட்டம் கூடும். முகம் புதுப்பொலிவு கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். இன்று இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். உறவினர்களால் நன்மை உண்டு. நண்பர்கள் கைக் கொடுப்பர். வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

மீனம்

அலுவலகத்தில் சற்று வேலைப்பளு அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு புது பதவி கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். விசா கிடைத்து வெளிநாடு செல்வர். தேகம் பளிச்சிடும். பெண்கள் தேவையான பொருட்கள் வாங்கிவிடுவர். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக செல்லும்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

 

Tags:    

மேலும் செய்திகள்