இன்றைய ராசிபலன் - 29.5.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;

Update:2024-05-29 06:16 IST

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் வைகாசி மாதம் 16-ம் தேதி புதன்கிழமை

நட்சத்திரம்: இன்று காலை 8.36 திருவோணம் பின்பு அவிட்டம்

திதி: இன்று பிற்பகல் 1.26 வரை சஷ்டி பின்பு சப்தமி

யோகம்: சித்த, மரண யோகம்

நல்ல நேரம் காலை: 9.30 - 10.30

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் பிற்பகல்: 12.00 - 1.30

எமகண்டம் காலை: 7.30 - 9.00

குளிகை காலை: 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் மாலை: 06.30 - 07.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: மிருகசீரிடம்

ராசிபலன்

மேஷம்

வேலையில்லாதவருக்கு ஒரு நிரந்தரமான உத்யோகம் கிடைக்கும். வங்கிக் கடனை அடைக்க துவங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.

அதிர்ஷ்டநிறம்: நீலம்

ரிஷபம்

இன்று மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் தாங்கள் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்க வேண்டாம். யாரிடமும் வாக்கு வாதம் செய்யாதீர்கள். கார்த்திகை மற்றும் ரோகிணி நட்சத்திரகாரர்கள் தங்கள் பணிகளை துவங்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

மிதுனம்

இளைஞர்களுக்கு நல்பணி கிட்டும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாள்வீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வெளி மக்கள் தொடர்பு அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் செலவு உண்டாகும்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

கடகம்

எதிர்பார்த்த நல்ல காரியம் நடந்தேறும். உணவு விசயத்தில் எச்சரிக்கை தேவை. இழுபறியாக இருந்த வீட்டு மனை வாங்குவது, விற்பது தொடர்பான விசயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையும். பங்குச் சந்தை கை கொடுக்கும். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

சிம்மம்

இன்று செய்ய வேண்டிய பணிகளை யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். தங்கள் விசயங்களில் மற்றவர்கள் தலையிடுவதை நீங்கள் அறவே விரும்ப மாட்டீர்கள். முன் கோபம் வரும். அதனை, அடக்கி ஆள்வது தங்களது பக்குவத்தை வளர்க்க உதவும். முகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

கன்னி

வீடு வாங்குவது, மாறுவது நல்ல விதத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு நுரையீரல் மற்றும் கர்ப்பப்பை பிரச்சினை வரலாம். இயற்கை வைத்தியத்தை நாடுவது நல்லது. தேகம் தேறும்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

துலாம்

தங்கள் கீழ் பணியாற்றும் வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் கோபத்தை காட்டாமல் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. குடும்பத்தில் மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். உறவினர்கள் உங்களை மதிப்பார்கள்.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

விருச்சிகம்

வாகனச் செலவு வந்து போகும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பெற்றோர்களின் நலனில் அக்கறைக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

தனுசு

வங்கி கடன் இனிதே அடையும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மகன்வழி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழியாக தங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

மகரம்

திடீர் பயணங்கள் வந்துப் போகும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தங்களுக்கு பிடித்த கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். வீட்டில் விசேஷங்களுக்கு இடமுண்டு.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

கும்பம்

அரசு அதிகாரிகள் பொறுமையை கடைப்பிடிப்பது நன்மையைத் தரும். பெற்றோர்களை காண சொந்த ஊருக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தினை விரிவுபடுத்துவர். வெளியூர் சென்று தங்கள் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு நல்ல லாபத்தினை எதிர்பார்க்கலாம். தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

மீனம்

அலுவலகத்தில் சக ஊழியர்கள் தங்களது வேலைகளை பங்கு போடுவர். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். காரியம் ஒன்று எளிதில் முடியும். பெண்கள் தங்கள் கணவரின் மனம் கோணாதவாறு நடப்பது நல்லது. கலைஞர்களுக்கு பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும். விசா முயற்சிகள் பலிதமாகும். பணம் பல வழிகளில் தேடி வரும்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

 

Tags:    

மேலும் செய்திகள்