இன்றைய ராசிபலன் - 29.08.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்;

Update:2024-08-29 06:48 IST

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆவணி மாதம் 13ம்- தேதி வியாழக்கிழமை

நட்சத்திரம் : இன்று இரவு 8.38 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்

திதி : இன்று அதிகாலை 04.59 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம் : மரண, அமிர்த யோகம்

நல்ல நேரம் மாலை : 10.45 -11.45

ராகு காலம் பிற்பகல் : 1.30 - 3.00

எமகண்டம் காலை : 6.00 - 7.30

குளிகை காலை : 9.00 - 10.30

கௌரி நல்ல நேரம் காலை : 12.15 - 1.15

கௌரி நல்ல நேரம் மாலை : 6.30 - 7.30

சூலம் : தெற்கு

சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வீர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கடன் பைசலாகும். குடும்பப் பிரச்சினை தீரும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். மாணவர்கள் எழுதி பார்ப்பது நல்லது. நோய் தீரும், ஆரோக்கியம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

ரிஷபம்

வீட்டில் உள்ள செல்ல பிராணிகளுக்கு மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. கவனம் தேவை. வழக்கில் திருப்பம் நிகழும். வரவேண்டிய பதவி தேடி வரும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல ஒரு பரஸ்பர உறவு ஏற்படும். ஆன்மீகத்தில் மனம் நாடும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

மிதுனம்

குடும்பத் தலைவிகள் ஒரு சில விசயத்தில் தைரியமாக முடிவெடுத்து செல்வீர். தங்கள் கணவர் தங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பார். மாமியார் உறவு தங்களுக்கு சிறு கருத்து மோதல்கள் வந்து போகும். அதிக சம்பளத்திற்காக புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கடகம்

பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். குடும்பத்தலைவிகள் தங்கள் சேமிப்பில் கவனம் தேவை. தொலைந்து போன சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கைக்கு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

சிம்மம்

வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். செல்வாக்கும் பெருகும். குடும்பத்துடன் விருந்து விழா என்று கலந்து கொள்வீர்கள். கணவன் வழி உறவினர்கள் அன்பு பாராட்டுவர். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். கவனம் தேவை. வியாபாரிகளுக்கு இயல்பு லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கன்னி

உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனைத்து வேலைகளையும் முடித்து விடுவீர்கள். அலைச்சலால் தலைவலி உண்டாகும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உணவில் கவனமுடன் இருப்பது நல்லது. புதிய வாகனம் ஒன்றை இன்று பார்த்து முன்பணம் கொடுத்து வருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

துலாம்

இன்று சுவாதி, விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்நிறம்

விருச்சிகம்

வெளியிடங்களில் உணவு உட்கொள்ள வேண்டாம். வெளிநாட்டு பயணம் சிறப்பாகும். மாணவர்களின் திறன் கூடும். நாத்தனாரிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து நட்பு பாராட்டுவீர்கள் கல்லூரி மாணவிகளின் நீண்ட நாள் கனவு பலிக்கும். தங்கள் பிள்ளைகள் பெருமை சேர்ப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

தனுசு

சுயதொழில் செய்யும் பெண்களுக்கு பணம் பாக்கெட்டை நிரப்பும். தங்களுடைய பூர்வீக சொத்தின் தாமதித்த பங்குப் பணம் கைக்கு வரும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். தாய் மீது அன்பு அதிகரிக்கும். மார்கெட்டிங்பிரிவினருக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். உடல் வலி நீங்கும். வீட்டை புதுப்பிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

யாராவது கொடுக்கல் வாங்கல் கேட்டால் தயவுசெய்து இல்லை என்று மறுத்து விடுவது நல்லது. பணவிசயத்தில் கவனம் தேவை. உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனைவி வீட்டாரிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். வீட்டில் தயாரிக்கும் பொருட்களில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

கும்பம்

தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவர். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. பழைய வீட்டை சீர் செய்வீர்கள். பணவரவுக்கு வழியுண்டு. கவலை வேண்டாம். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

மீனம்

உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். உங்கள் செயலில் உற்சாகம் வெளிப்படும். தடைபட்ட திருமணம் இனிதே முடியும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரிகள் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்துவீர்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை



 


Tags:    

மேலும் செய்திகள்