இன்றைய ராசிபலன் - 22.08.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

Update: 2024-08-22 01:18 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆவணி மாதம் 6ம்- தேதி வியாழக்கிழமை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 04-32 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி

திதி : இன்று மாலை 6-14 வரை திரிதியை பின்பு சதுர்த்தி

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் மாலை : 10.45 - 11.45

ராகு காலம் பிற்பகல் : 1.30 - 3.00

எமகண்டம் காலை : 6.00 - 7.30

குளிகை காலை : 9.00 - 10.30

கௌரி நல்ல நேரம் காலை : 12.00 - 1.00

கௌரி நல்ல நேரம் மாலை : 6.30 - 7.30

சூலம் : தெற்கு

சந்திராஷ்டமம் : பூசம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் வரும். ஆதலால், சித்த மருத்துவத்தை பயன்படுத்துவது நல்லது. உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளி நபர்கள் மற்றும் யாரிடமும் அதிகமாக பேசுவதை தவிர்ப்பது பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

ரிஷபம்

திருமணம் மற்றும் பிறந்த நாள் விழாக்களில் கலந்து கொண்டு அங்கு தங்களுக்கு முதல் மரியாதைக் கிடைக்கும். பெண் நண்பர்கள் அறிமுகமாவர். அவர்களால் பெரிய விசயங்கள் முடியும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். கை, கால் வலி வந்துப் போகும். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மிதுனம்

நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள். குடும்பத் தலைவிகள் தாங்கள் விரும்பிய கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப காரியம் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கடகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சிம்மம்

உத்யோகத்தில் சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு தாங்கள் விரும்பியபடியே வரன் அமையும். நோய் எதிர்ப்புசக்தி கூடும். அழகுக்கலை நிபுணர்கள் ஏற்றம் காண்பர். கொடுக்கல்–வாங்கல் சீராகும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கன்னி

கலைஞர்களுக்கு வெற்றி குவியும். வயது முதிர்ந்த ஆண்கள் திருமண வாழ்க்கைப் பற்றி முக்கிய முடிவுகள் எடுப்பர். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கணவன்–மனைவி உறவு இனிக்கும். பெண் அதிகாரிகளுக்கு தன் கீழ் வேலை பார்ப்பவர்களிடம் ஒரு கண் வைப்பது நல்லது. சக ஊழியர்கள் ஒத்துழைப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

துலாம்

தொழில் முனைவர்களுக்கு தொழிலில் ஏற்றம் நிகழும், சுப காரியங்கள் கூடி வரும். ஆன்மீக யாத்திரை மேற்கொள்வீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும். குடும்பத்துடன் விருந்து விழா என கலந்து கொண்டு மகிழ்வீர்கள். சகோதரரால் நன்மை உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

விருச்சிகம்

அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். மாணவர்கள் அதிக மதிப்பெண்களை ஈட்டுவார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண் உத்யோகஸ்தர்கள் பணியாளர்கள் சுதந்திர மனப்பான்மையுடன் பணியாற்றுவர். உடல் நலத்தில் கவனம் மிகும். காதல் கசக்கும். நண்பர்களால் உதவி உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு

உத்யோகஸ்தர்களுக்கு போனஸ் கிடைக்கும். பெண்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பர். சகோதரிவழியில் உதவி கிடைக்கும். அழகு நிலையங்கள் ஒரு சிலர் திறப்பர். பணவரவு அதிகரிக்கும். எதிரிகள் சரணடைவர். பொது நலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மகரம்

மாணவர்களுக்கு படிப்பில் இடையூறு அகலும். கலைஞர்களின் எண்ணங்கள் ஈடேறும். பிள்ளைகளுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும். வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். தொழிலாளர்களுக்கு தங்கள் கோரிக்கை நிறைவேறும். கை, கால் வலி வந்துப் போகும். வெளியூர் பயணம் மனதிற்கு மகிழ்ச்சி தரும். தேவைக்கு ஏற்ப பணம் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

வீட்டில் வெளிநபர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. கூட்டுத்தொழில் ஏற்றம் தரும். கூடுமானவரை திருமணத்தை தள்ளிப் போட வேண்டாம். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். நண்பர்கள் உதவுவர். கணவன்–மனைவி உறவு தித்திக்கும். எதிரிகள் விலகி ஓடுவார்கள்.பிள்ளைகளுக்கு தொலை தூர பயணம் உண்டு. சுற்றுலா சென்று வருவர்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

தந்தைவழி சொத்து கைக்கு வரும். மாணவர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. வீட்டில் சுப விசேஷங்களான காது குத்து, பூப்பெய்தல் விழா என வீடு களைகட்டும். தங்களுக்கு பிடித்தவாறே துணை அமையும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். கலைத்துறையினர் வெற்றி நடைபோடுவீர்கள். பண வரவுக்கு பஞ்சமில்லை.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

Tags:    

மேலும் செய்திகள்