இன்றைய ராசிபலன் - 23.06.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்;

Update:2024-06-23 06:32 IST

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆனி மாதம் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

ஆங்கில தேதி: 23

ஆங்கில மாதம்: ஜூன்

நட்சத்திரம்: இன்று மாலை 06.42 வரை பூராடம் பின்பு உத்திராடம்

திதி: இன்று காலை 6.19 வரை பிரதமை பின்பு துவிதியை

யோகம்: சித்த, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

நல்ல நேரம் மாலை: 03.30 - 4.30

ராகு காலம் மாலை: 04.30 - 6.00

எமகண்டம் மாலை: 12.00 - 1.30

குளிகை மாலை: 03.00 - 4.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டம்: கிருத்திகை, ரோகிணி

இன்றைய ராசிபலன்:

மேஷம்

எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் உங்களுக்கு அவர்கள் மறைமுகமாகப் பிரச்சினைகள் உண்டாக்குவார்கள். உத்யோகத்தில் தாங்கள் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

ரிஷபம்

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மிதுனம்

தங்கள் பிள்ளைகள் உயர் படிப்பு படிக்க வெளிநாடு செல்வர். நண்பர்களுக்கு உதவி செய்யும் நிலையில்தான் நீங்கள் இருப்பீர்கள். அவர்களும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பார்கள். அரசு வழிகளில் ஆதாயம் உண்டாகும். குடும்பம் பிரச்சினைகளின்றி சுமுகமாக செல்லும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கடகம்

வம்பு, வழக்குகளில் நீங்கள் குற்றமற்றவர் என நிரூபணமாகும். உங்களது பேச்சாலேயே பிரச்சினைகள் உருவாகும். ஆதலால் எங்கு பேசினாலும் நிதானமாகவும் யோசித்தும் பேசுங்கள். பிள்ளைகளால் நற்பெயரும் கௌரவமும் அதிகமாகும். உடல் நிலை சிறப்பாக செயல்படும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

சிம்மம்

தங்கள் பிள்ளைகளின் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி இனிமையாக முடியும். தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும். பிரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இணைவர். புதிய வாகனம் வாங்கும் திட்டம் பலிக்கும். அலைச்சலினால் உடல்நிலை பாதிக்கும். கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

கன்னி

செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் இல்லையென்றாலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும். தங்கள் சகோதரிக்கு உதவி செய்வீர்கள். சிலருக்குப் புதிய வீடு கட்டவோ அல்லது வாங்கவோ அதற்கான அமைப்பு உண்டாகும், விலகியிருந்த நண்பர்கள் இனி நெருங்கி வருவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

துலாம்

சிலருக்கு நிலையான தொழிலும் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் வரும். உயர் பதவியுடன் கூடிய இடமாற்றமும் ஏற்பட வாய்ப்புண்டு. புனித ஸ்தலங்களுக்குச் செல்ல சந்தர்ப்பம் கூடி வரும். தேக ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சரியாகும். குடும்பத்தில் சுபகாரியம் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

விருச்சிகம்

சிலருக்கு வீடு அல்லது அலுவலக இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் அன்னியர்களின் தலையீடு உண்டாகும். அவற்றை பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும். தாயாரின் உடல்நிலையில் பிற்போக்கான நிலை உண்டாகும். கவனம் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

தனுசு

வேலை இல்லாதவர்களுக்கு தங்கள் கடின முயற்சியால் விரும்பிய வண்ணம் வேலை கிடைக்கும். தாய்வழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். உடல் நிலை மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் இருக்கும். சுறுசுறுப்பு அவசியம்.தொலைதூர ஆலயங்களுக்குச் சென்று வரும் வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மகரம்

நீண்ட நாட்களாக வாங்க நினைத்த வாகனத்தை வாங்குவீர்கள். தம்பதிகளின் அன்பு இரட்டிப்பாகும். காதலர்களின் சுயமுகம் தெரியும். வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்வீர்கள். பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை ஆற்றுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

பங்குச் சந்தையில் தங்கள் இருப்பு அதிகரிக்கும். வீடு மற்றும் அலுவலகத்திற்குண்டான பழுது பார்ப்பு செலவுகள் உண்டாகும். மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அவசியம். குலதெய்வ வழிபாடு மிகமிக அவசியம். தந்தை வழியில் பணம் வரும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

வெளியூர் பயணங்களை மேற்கொள்வதால் வெளிநபர்களின் தொடர்பும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். இளைய சகோதரர்களின் உதவியை எதிர்பார்க்காமல் நீங்களே எந்த ஒரு காரியத்தையும் செய்யும் சூழ்நிலை உண்டாகும். நீண்ட கால வைப்புத் தொகையாக வங்கியில் டெபாசிட் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

Tags:    

மேலும் செய்திகள்