இன்றைய ராசிபலன் - 09.09.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்;

Update:2024-09-09 06:21 IST

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆவணி மாதம் 24ம்- தேதி திங்கட்கிழமை

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 03.49 வரை விசாகம் பின்பு அனுஷம்

திதி : இன்று மாலை 06.26 வரை சஷ்டி பின்பு சப்தமி

யோகம் : மரண, சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 6.15 - 7.15

நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45

ராகு காலம் காலை : 07.30 - 09.00

எமகண்டம் காலை : 10.30 - 12.00

குளிகை மாலை : 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம் காலை : 09.15 - 10.15

கௌரி நல்ல நேரம் மாலை : 7.30 - 8.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி

இன்றைய ராசிபலன்:

மேஷம்

தம்பதிகள் ஆலயப் பணியில் இணைந்து செயல்படுவீர். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக தாங்கள் சந்திக்க வேண்டும் என்பவரை சந்திப்பீர்கள். ஒரு சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். விரும்பிய துறையில் நீங்கள் கால் பதிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

ரிஷபம்

உறவினர்கள் வீட்டிற்கு குடும்பத்துடன் செல்வீர்கள். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு தாங்கள் விரும்பியவாறு வரன் கிடைக்கும். பங்குச் சந்தைகளில் பணம் போட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட லாபம் உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு முன்பணம் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

மிதுனம்

மாணவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டாகும். நல்ல மதிப்பெண்கள் பெறுவர். காதலர்கள் குடும்பத்தை மட்டும் கவனம் கொள்வது அவசியம். தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். சகோதர சகோதரிகளே இடையே அன்பு பாராட்டுவீர்கள். உறவினர்கள் வந்து போவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல் : நிறம்

கடகம்

இதுவரை வாரா கடன்கள் வந்து சேரும். அரசு அதிகாரிகளுக்கு பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு வெளிநாட்டு பயணம் லாபத்தை தரும். தம்பதிகளிடையே அன்பு பாராட்டுவீர்கள். மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்குஅதிக வருவாய் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வயலட்

சிம்மம்

புரிந்து கொள்ளாமல் சென்ற தங்கள் துணைவியார் திரும்பி வந்து சேருவார். தாயின் உடல்நலத்தில் கவனம் கொள்ளவும். மருத்துவ செலவிற்கு இடம் உண்டு. ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களுக்கு பெரிய ஆடர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் உள்ளவர்கள் உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கன்னி

தங்கள் பிள்ளைகளின் வரனுக்காக அலைச்சல்கள் மிகும். கூட்டுத் தொழிலாளிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபத்தை தரும். தேக ஆரோக்கியம் சிறக்கும். தாங்கள் நினைத்த ஒரு காரியம் என்று இனிதாக முடியும். எதிர்பார்த்த நபரை இன்று சந்திப்பீர்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவர்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

துலாம்

பெண்களுக்கு பண வரவு அதிகரிக்கும். குறிப்பாக கணினி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மார்க்கெட்டிங் பிரிவினர்கள் அதிக ஆர்டர்களை பெறுவர். நீரிழிவு நோயாளிகள் குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது நல்லது. திருமணமானவர்களுக்கு குழந்தைப் பேறுக்கான நற்செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

விருச்சிகம்

இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பண பற்றாக்குறை நீங்கும். குடும்பத் தலைவிகள் குடும்பத்திற்காக புதிய தொழில் துவங்குவர். இருசக்கர வாகனத்தின் செல்பவர்கள் கட்டாயம் அணியவும். உடல் நலத்தில் கவனம் தேவை. இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

தனுசு

உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் ஆலோசனை செய்து தங்கள் வேலைகளை பங்கிட்டு முடிப்பர். குடும்ப தலைவிகளுக்கு தங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். தம்பதிகளிடையே அன்பு நீடிக்கும். தேக ஆரோக்கியம் சிறக்கும். அக்கம் பக்கம் வீட்டார் உதவி புரிவார்கள். நீண்ட காலமாக பார்க்காத இன்று நண்பரை இன்று சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

மகரம்

வழக்கறிஞர்களுக்கு தங்கள் வழக்கு வெற்றியாகும். பிள்ளைகள் தங்களின் பெற்றோரை மதிப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை சரிவர செய்து முடிப்பார்கள். வெளிநாடு பயணம் உண்டாகும். மளிகை கடை வியாபாரம் அதிகரிக்கும். பெண்களுக்கு புதிய ஆடை ஆபரணம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கும்பம்

அலைச்சல்கள் அதிகரிக்கும். மறுமணத்திற்காக காத்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு வந்து போகும். மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். ரியல் எஸ்டேட் கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மீனம்

உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

Tags:    

மேலும் செய்திகள்