இன்றைய ராசிபலன் - 02.09.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

Update: 2024-09-02 02:41 GMT

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் ஆவணி மாதம் 17-ம் தேதி திங்கட்கிழமை

நட்சத்திரம்: இன்று இரவு முழுவதும் மகம்

திதி: இன்று காலை 06.32 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை

யோகம்: மரண, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 06.15 - 07.15

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் காலை: 07.30 - 09.00

எமகண்டம் காலை: 10.30 - 12.00

குளிகை மாலை: 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம் காலை: 01.45 - 02.45

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

ராசிபலன்

மேஷம்

குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர். உடல் நலம் மேம்படும். தம்பதிகளிடையே இருந்து வந்த பிணக்குகள் மறையும். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அந்த வேலைகளை பகுதி பகுதியாக பிரித்துக் கொண்டு செய்து முடித்துவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

இன்றைய நாளில் தாங்கள் வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள். தொழில் ரகசியங்கள் வெளியில் கசியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு பிடித்த விசயங்கள் நடக்கும் நாள். தந்தைவழி சொத்து கைக்கு வரும்.ஷேர் மூலமாக பணம் வரும். உடல் நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மிதுனம்

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நல்ல பொறுப்பு கிடைக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கடகம்

சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு தங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். அரசியல்வாதிகள் நாவடக்கமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பேச்சினால் விளைவுகளை சந்திப்பீர்கள். பொறுமை அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். வியாபாரிகளுக்கு நல்ல விற்பனை உண்டு. எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத் தலைவிகள் சுதந்திரமாகச் செயல்படுவர். முன்பிருந்ததை விட ஆரோக்கியம் மேம்படும். வாகனம் பழுதடையும், அதை சரி செய்வீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி

பிள்ளைச் செல்வம் இல்லாத குறை உங்களை பெரிதும் பாதித்ததே, இனி கவலை வேண்டாம் அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும். கலைஞர்களுக்கு உற்சாகம் கூடும் நாள். பெரிய பேனர்களிலிருந்து அழைப்பு வரும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. உயர் பதவியும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

துலாம்

மாணவர்களுக்கு அதிகம் மதிப்பெண் பெற வேண்டும் என்றால் இன்னும் முயற்சி தேவை. ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வயிறு உபாதை இருக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும். காதலர்கள் தங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

விருச்சிகம்

தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். பிள்ளைகள் சொல்படி நடப்பர். அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எங்கு சென்றாலும் உங்களுக்கு செல்வாக்கு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

தனுசு

மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்கள் மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். அரைகுரையாக முடிக்க முடியாத வீடு கட்டும் பணி மீண்டும் துவங்கும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். படிப்பில் நன்கு ஆர்வம் பிறக்கும். தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

முக்கிய விசயத்திற்கு என்ன செய்யலாம் என யோசனை செய்ததில் தங்களுக்கு எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். உடல்நிலை எப்போதும் சீராக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். தொழிலதிபர்கள் தொழிலில் புதிய நவீன நுட்பத்தை கையாள்வர். வியாபாரிகள் அரசு வகையில் ஆதாயபலன் பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

குடும்பத் தலைவிகள் தங்கள் விருப்பம் போல் தங்கள் கணவர் தங்களுக்கு வீட்டிற்கு தேவையானதை வாங்கி குவிப்பார். வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். சொத்து வாங்குவது, விற்பது போன்ற நிலம் வீடு சம்பந்தப்பட்டவைகளில் லாபமாக முடியும். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் டிஜுட்டல் மார்கெட்டிங் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

 

Tags:    

மேலும் செய்திகள்