விம்பிள்டன் டென்னிஸ் : மேட்டியோ பெரெட்னி தொடரிலிருந்து விலகல்
இத்தாலியை சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி இந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.;
லண்டன்,
ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று தொடங்கியது .இந்த தொடர் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில் 2021ம் ஆண்டு விம்பிள்டன் தொடரில் 2ஆம் இடம் பிடித்த இத்தாலியை சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி இந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.