அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

இந்த தோல்வியின் மூலம் ஜோகோவிச் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

Update: 2024-08-31 05:13 GMT

நியூயார்க்,

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் 'நம்பர் 1' வீரரான ஜோகோவிச் (செர்பியா), அலெக்ஸி பாபிரின் (ஆஸ்திரேலியா) உடன் மோதினார்.

இதில் முதல் 2 செட்டுகளை பாபிரின் கைப்பற்றி ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து 3-வது செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார். இதனால் 4-வது செட் பரபரப்புக்குள்ளானது. அந்த செட்டை பாபிரின் கைப்பற்றி ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாபிரின் 6-4, 6-4, 2-6 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

தோல்வியடைந்த நட்சத்திர வீரர் ஜோகோவிச் அமெரிக்க ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்