அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் போபண்ணா ஜோடி தோல்வி
கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது.;
நியூயார்க்,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது.
இதில், இந்தியாவின் ரோகன் போபண்ணா - இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி, அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட்- டொனால்ட் யங் ஜோடியுடன் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.