அமெரிக்க ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா, எம்மா நவரோ அரையிறுதிக்கு முன்னேற்றம்
நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா - எம்மா நவரோ மோத உள்ளனர்.;
நியூயார்க்,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான எம்மா நவரோ (அமெரிக்கா) - பாலா படோசா (ஸ்பெயின்) உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய எம்மா நவரோ 6-2, 7-5 என்ற செட் கணக்கில் பாலா படோசாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதே தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) - கின்வென் ஜெங் (சீனா) உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கின்வென் ஜெங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா - எம்மா நவரோ மோத உள்ளனர்.