நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சின்னர் தோல்வி
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இத்தாலி வீரர் சின்னர் ரஷிய வீரர் ஆண்ட்ரி ரூப்லெவ் உடன் மோதினார்.;
டொரண்டோ,
கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இத்தாலி வீரர் சின்னர் ரஷிய வீரர் ஆண்ட்ரி ரூப்லெவ் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஆண்ட்ரி ரூப்லெவ் 6-3 , 1-6 , 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் சின்னர் தொடரில் இருந்து வெளியேறினார்.